முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கில் குண்டுவெடிப்பு: 7 பேர் பரிதாபமாக பலி

வெள்ளிக்கிழமை, 1 நவம்பர் 2024      உலகம்
Pak 2024-11-01

Source: provided

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில், குழந்தைகள் 5 பேர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், பெண்கள் உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பள்ளிக்கு அருகே நேற்று மர்ம நபர்கள் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தினார்.

இந்த தாக்குதலில், பள்ளி குழந்தைகள் 5 பேர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 22 பேர் பலத்த காயமுற்றனர். காயம் அடைந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பள்ளி மாணவர்கள் ஆவர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த, ஐ.இ.டி., வகை குண்டை வெடிக்க செய்து மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியது போலீசார் விசாரணையில் அம்பலமானது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து