முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படைகளை திரும்பப்பெற்ற சீனா: லடாக்கில் ரோந்து பணிகளை துவங்கியது இந்திய ராணுவம்

வெள்ளிக்கிழமை, 1 நவம்பர் 2024      இந்தியா
Ladakh 2024-11-01

லடாக், கிழக்கு லடாக் எல்லையில் இருந்து படைகளை சீனா திரும்பப்பெற்ற நிலையில் இந்தியா ரோந்து பணியை தொடங்கியுள்ளது.

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி இந்திய, சீன படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தங்கள் தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீனா தெரிவித்தது. இந்த மோதலை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்தன. பின்னர், இரு நாடுகளுக்கும் இடையேயான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் எல்லையில் இருந்து படைகள் மெல்ல மெல்ல விலக்கிக்கொள்ளப்பட்டு வந்தன. இதனிடையே, பல கட்ட பேச்சுவார்த்தையின் பலனாக லடாக்கின் டெப்சாங், டெம்சோக் ஆகிய பகுதிகளில் இருந்து இரு நாடுகளும் படைகளை வாபஸ் பெற்றன.

இந்நிலையில், கிழக்கு லடாக்கின் டெம்சோக் பகுதியில் இந்திய ராணுவம் நேற்று ரோந்து பணியை தொடங்கியுள்ளது. இருநாடுகளுக்கும் இடையே மோதல் தொடங்கிய 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குமுன் இருந்த நிலையை அடிப்படையாக கொண்டு இந்திய ராணுவம் டெம்சோக் பகுதியில் நேற்று ரோந்து பணியை தொடங்கியுள்ளது.

அதேபோல், டெப்சாங் பகுதியிலும் 2020 ஏப்ரலுக்கு முந்தைய நிலை அடிப்படையில் இந்திய ராணுவம் விரைவில் ரோந்து பணியை ஈடுபட உள்ளது. டெம்சோக் பகுதியில் இருந்து குவிக்கப்பட்டிருந்த படை வீரர்களை சீனாவும் திரும்பப்பெற்றுள்ளது. இதையடுத்து, 2020 ஏப்ரலுக்கு முந்தைய நிலையை அடிப்படையாக கொண்டு டெக்சோக் பகுதியில் சீனாவும் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு மோதலால் 4 ஆண்டுகளுக்கு மேலாக லடாக் எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வழக்கமான ரோந்து பணியை இருநாடுகளும் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து