முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா மாநிலத்தில் 9.7 கோடி வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் தகவல்

வெள்ளிக்கிழமை, 1 நவம்பர் 2024      இந்தியா
Election-Commision 2023-04-20

Source: provided

மும்பை : மகாராஷ்டிரத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 9.7 கோடி என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிப்பிக்கப்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் உள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என கடந்த மாதம் 15 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. அன்றைய தேதியின்படி மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 9.6 கோடி என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை(அக்.31) புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.  அதன்படி, மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 9,70,25,119. இதில் 47,392 வாக்காளர்கள் 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பகிர்ந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 9,70,25,119. இதில், 5,00,22,739 பேர் ஆண் வாக்காளர்கள், 4,69,96,279 பேர் பெண் வாக்காளர்கள் மற்றும் 6,101 மூன்றாம் பாலினத்தவர்கள். 18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 22,22,704 பேர். இவர்கள் முதல் முறை வாக்காளர்கள். 30-39 வயதுக்கு இடைப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 2,18,15,278.

அதே நேரத்தில் 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 47,392 ஆக உள்ளது. இதேபோன்று 85-150-க்கும் இடைப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 12,40,919. 120-க்கும் அதிகமான வாக்காளர்களின் எண்ணிக்கை 110. இதில் ஆண் வாக்காளர்கள் 56, பெண் வாக்காளர்கள் 54 பேர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து