முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை 3-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் இந்தியா தடுமாற்றம் : நியூசி. 235 ரன்களில் ஆல் அவுட்

வெள்ளிக்கிழமை, 1 நவம்பர் 2024      விளையாட்டு
Jadeja 2024-03-17

Source: provided

மும்பை : 3-வது டெஸ்ட்: ஜடேஜா அபார பந்துவீச்சு.. முதல் இன்னிங்சில் 235 ரன்களில் ஆல் அவுட் ஆன நியூசிலாந்து நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டேரில் மிச்செல் 82 ரன்கள் அடித்தார்.

மும்பை வான்கடே... 

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு கான்வே 4 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 5 ரன்களிலும், கேப்ட்ன் டாம் லாதம் 28 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்த நெருக்கடியான சூழலில் பார்ட்னர்ஷிப் அமைத்த வில் யங் - டேரில் மிச்செல் இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இவர்களில் யங் 71 ரன்களில் ஆட்டமிழந்தார்.

235 ரன்களில் அவுட்... 

அதன்பின் நியூசிலாந்து அணி மீண்டும் விக்கெட்டுகளை தாரைவார்க்க தொடங்கியது. ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் மாறி மாறி விக்கெட் வேட்டை நடத்தினர். இதனிடையே டேரில் மிச்செல் 82 ரன்களில் அவுட்டானார். முடிவில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

ஆரம்பமே அதிர்ச்சி... 

இதனையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இன்னிங்சை தொடங்கிய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ரோகித் சர்மா 18 ரன்களிலும் ஜெய்ஸ்வால் 30 ரன்களிலும் அவுட் ஆகினர். இந்தியா 78 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் விக்கெட் வீழ்ச்சியை தடுக்க பந்து வீச்சாளரான முகமது சிராஜ் களமிறக்கப்பட்டார். அவர் முதல் பந்திலேயே அவுட் ஆனார். அடுத்து வந்த விராட் கோலி 4 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

4 விக்கெட்டுகள்.. 

இதன் மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. சுப்மன் கில் 31 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 1 ரன்னிலும் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்சில் இந்தியா 149 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இன்னும் 4 நாட்கள் ஆட்டம் உள்ள நிலையில் இன்று இந்தியா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஜடேஜா புதிய மைல்கல்

முதல் இன்னிங்சில் இந்தியா தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.  முன்னதாக இந்த இன்னிங்சில் எடுத்த 5 விக்கெட்டுகளையும் சேர்த்து ஜடேஜா தம்முடைய டெஸ்ட் கெரியரில் இதுவரை 314 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது இடத்தில் இருந்த ஜாகீர் கான், இஷாந்த் சர்மாவின் வாழ்நாள் சாதனையை உடைத்துள்ள ஜடேஜா புதிய சாதனை படைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து