எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வுப்பணி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்படி தனது முதல் கள ஆய்வுப்பணியை வருகிற 5-ந்தேதி கோவையில் தொடங்குகிறார். 5-ந்தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் கோவையில் முகாமிட்டு பல்வேறு நலப்பணிகளை தொடங்கி வைக்கிறார். அத்துடன் அவர் கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளையும் சந்தித்து பேசுகிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:- 5-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு கோவை வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கிருந்து கார் மூலம் மு.க.ஸ்டாலின் விளாங்குறிச்சி செல்கிறார். அங்கு புதிதாக ரூ.114.16 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய ஐ.டி. பார்க்கை திறந்து வைக்கிறார்.
பின்னர் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மாலை 4 மணிக்கு கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்கிறார். அங்கு தங்க நகை தயாரிப்பு தொழிலில் உள்ள சிக்கல்கள் குறித்தும், அதற்கு தீர்வு காணவும் சம்பந்தப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
மாலை 5 மணிக்கு போத்தனூர் பிவிஜி திருமண மண்டபத்தில் கோவை ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று இரவில் தங்குகிறார். மறுநாள் (6-ந்தேதி) காலை 10 மணிக்கு கோவை சிறை வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.167 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் செம்மொழி பூங்கா பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
தொடர்ந்து காந்திபுரம் பஸ்நிலையம் பகுதிக்கு சென்று டவுன் பஸ் நிலையம் பின்புறம் 6.9 ஏக்கரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார். மதியம் விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்புகிறார். கோவை வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு விழாக்கள் மட்டுமின்றி தங்களையும் சந்தித்து பேசுவதால் தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த சில நாட்களாக கோவையில் முகாமிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள். கோவை விளாங்குறிச்சியில் 8 தளங்களுடன் கட்டப்பட்டு உள்ள புதிய தொழில்நுட்ப பூங்காவை 5-ந்தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்.
6-ந்தேதி காந்திபுரம் பஸ் நிலையம் மத்திய சிறைச்சாலை மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவியல் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டுகிறார். இந்த நூலகம் 7 தளங்களுடன் ஒரு லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைகிறது.முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகமுறை சுற்றுப்பயணம் செய்த மாவட்டமாக கோவை இருக்கிறது. கோவைக்கு இன்னும் பல திட்டங்களை முதல்வர் வழங்க உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 days ago |
-
மீண்டும் மும்பை அணியில்... ரோகித் சர்மா விளக்கம்
01 Nov 2024மும்பை : அடுத்த ஐ.பி.எல். தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மீண்டும் இடம் பிடித்துள்ளார். இதுகுறித்து தற்போது அவர் விளக்கமளித்துள்ளார்.
-
தீபாவளிக்கு வெளியூர் சென்றவர்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்ப தமிழ்நாடு முழுவதும் 12,846 பஸ்கள் இயக்கம் : இன்று முதல் 3 நாட்கள் இயக்க ஏற்பாடு
01 Nov 2024சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் சென்னைக்கு திரும்ப வசதியாக 12,846 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்
-
முடியாத வாக்குறுதிகளை அளிக்கிறது: காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி தாக்கு
01 Nov 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சி நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை மக்களுக்கு அளிக்கிறது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-11-2024.
02 Nov 2024 -
பும்ரா குறித்து பி.சி.சி.ஐ. விளக்கம்
01 Nov 2024இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மும்பையில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
-
பெங்களூரு அணிக்காக ஐ.பி.எல். கோப்பையை வெல்வதே இலக்கு : விராட் கோலி பேட்டி
01 Nov 2024பெங்களூரு : அடுத்த ஐ.பி.எல். தொடருக்கான பெங்களூரு அணியில் விராட் கோலி முதல் வீரராக தக்க வைக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூரு அணிக்காக ஒரு ஐ.பி.எல்.
-
மும்பை 3-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் இந்தியா தடுமாற்றம் : நியூசி. 235 ரன்களில் ஆல் அவுட்
01 Nov 2024மும்பை : 3-வது டெஸ்ட்: ஜடேஜா அபார பந்துவீச்சு..
-
ஒரகடத்தில் ரூ.2,858 கோடியில் உலகளாவிய மையம்: சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு செயிண்ட் கோபைன் விண்ணப்பம்
02 Nov 2024சென்னை, ஒரகடம் பகுதியில் ரூ.2,858 கோடி மதிப்பில் உலகளாவிய மையம் அமைப்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு செயிண்ட் கோபைன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
-
ரத்த உறவை விட லட்சிய உறவு மேல்: கொள்கை என்று வந்துவிட்டால் அண்ணன் என்ன, தம்பி என்ன..? விஜய் மீது சீமான் கடும் விமர்சனம்
02 Nov 2024சென்னை, தம்பி என்ற உறவு வேறு. கொள்கையில் முரண் என்பது வேறு. என்னைப் பெற்ற தாய் தந்தையராகவே இருந்தாலும், எங்களுடைய கொள்கைக்கு எதிராக இருந்தால், எதிரி எதிரிதான்.
-
'அமரன்' படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு
02 Nov 2024சென்னை : 'அமரன்' படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
மத்திய கிழக்கில் போர் பதற்றம்: கூடுதல் ஆயுதங்களை அனுப்பிய அமெரிக்கா
02 Nov 2024வாஷிங்டன், இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து மத்திய கிழக்கு பகுதிக்கு கூடுதல் ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது.
-
இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: லெபனானில் 52 பேர் பலி
02 Nov 2024பெய்ரூட் : வடக்கு லெபனானின் விவசாய கிராமங்களில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 52 பேர் உயிரிழந்தனர் என்று லெபனான் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்த
-
ஸ்பெய்னில் இயல்பு நிலை திரும்பாததால் மக்கள் அவதி
02 Nov 2024மாட்ரிட், ஸ்பெயின் நாட்டில் கனமழை - வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது.
-
ம.பி. பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் கடந்த 3 நாளில் 10 யானைகள் பலி: வனத்துறையினர் தீவிர விசாரணை
02 Nov 2024போபால் : மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் 13 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த அக்டோபர் 29ம் தேதி முதல் அடுத்தடுத்து 10 யானைகள் உய
-
நாகை - இலங்கை கப்பல் சேவை இனி ஐந்து நாட்களாக அதிகரிப்பு: சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி
02 Nov 2024நாகை, நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன் துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து இனி வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளத
-
கொல்கத்தா பெண் டாக்டர் விவகாரம்: போராட்டத்தை தொடரும் ஜூனியர் மருத்துவர்கள்
02 Nov 2024கொல்கத்தா : கொல்கத்தா பெண் டாக்டர் விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று ஜூனியர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
யாகசாலை பூஜையுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது
02 Nov 2024தூத்துக்குடி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் நேற்று காலை தொடங்கியது.
-
2 நாட்கள் முகாமிட்டு கோவையில் நலப்பணிகளை துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
02 Nov 2024கோவை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வுப்பணி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
-
இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் : ஈரான் மீண்டும் மிரட்டல்
02 Nov 2024தெஹ்ரான் : இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் உச்ச தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
-
மேற்கு வங்காளத்தில் பெண்களுக்கான ரெயில் பெட்டியில் பயணம் செய்ததாக 1,400 பேர் கைது
02 Nov 2024கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் கடந்த அக்டோபரில் கிழக்கு ரெயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட ரெயில்களின் பெண்களுக்கான பெட்டியில் பயணித்த ஆண் பயணிகள் 1,400-க்கும் மேற்பட்டோர்
-
திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
02 Nov 2024சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
-
தமிழ்நாடு முழுவதும் மண்டல வாரியாக த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம்
02 Nov 2024சென்னை : தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு
02 Nov 2024ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரின் கோடைகால தலைநகரான கான்யாரில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே சனிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்
-
9 நாடுகளுக்கு இலவச விசா - சீனா அறிவிப்பு
02 Nov 2024சீனா, தென்கொரியா, நார்வே உட்பட 9 நாடுகளுக்கு விசா இலவசம் என்று சீனா அறிவித்துள்ளது.புதிய நடைமுறை 2025 டிசம்பர் 31 வரை தான் அமலில் தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள
-
ஒரே மொழி, ஒரே தேர்தல் திட்டத்தை தமிழ்நாடும், கேரளாவும் இணைந்து எதிர்க்க வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு
02 Nov 2024கோழிக்கோடு, பா.ஜ.,வின் ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே தேர்தல் திட்டத்தை தமிழ்நாடும், கேரளாவும் இணைந்து எதிர்க்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.