முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா பெண் டாக்டர் விவகாரம்: போராட்டத்தை தொடரும் ஜூனியர் மருத்துவர்கள்

சனிக்கிழமை, 2 நவம்பர் 2024      இந்தியா
Kolkata 2024-11-02

Source: provided

கொல்கத்தா : கொல்கத்தா பெண் டாக்டர் விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று ஜூனியர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கில், ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் மற்றும் தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. இதனால் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு பின்னர் அடுத்தடுத்து பல்வேறு விசயங்கள் வெளிவந்தன. சந்தீப் கோஷ் தலைமையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்தது. இதற்காக அவருடைய இல்லம் உள்ளிட்ட பல இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் நீதி கோரி, டாக்டர்களில் ஒரு சிலர் உண்ணாவிரத போராட்ட அறிவிப்பையும் வெளியிட்டனர். தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் சிலருக்கு உடல்நல பாதிப்பும் ஏற்பட்டது. தீபாவளி கொண்டாட்டங்கள் ஒருபோது நடந்தபோதும், பெண் டாக்டருக்கு ஆதரவான பொதுமக்களின் அமைதி போராட்டமும் தொடர்ந்தது.

இந்நிலையில், ஜூனியர் டாக்டரான ராஜ்தீப் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலையுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் சி.பி.ஐ. கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் அனைவருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.குற்றப்பத்திரிகையில், தொடக்கத்தில் குறிப்பிடப்படாமல் விடப்பட்ட பெயர்கள் உள்ளடக்கிய ஒரு விரிவான குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

வருகிற 9-ம் தேதியுடன் இந்த சம்பவம் நடந்து 90 நாட்கள் ஆகவுள்ள சூழலில், நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடரும். அன்றைய தினம், இந்த வழக்கில் இதுவரை நடந்த மிகப்பெரிய விசயங்கள் எல்லாவற்றையும் காட்சிப்படுத்துவோம் என்றும் அவர் உறுதியுடன் கூறியுள்ளார். கடந்த 22-ந்தேதி, முதல்-மந்திரி மம்தா பானர்ஜியுடன் நடந்த 2 மணிநேர சந்திப்புக்கு பின்னர் ஜூனியர் டாக்டர்கள் மேற்கொண்டிருந்த உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், போராட்டம் இத்துடன் முடிந்து விடாது என்றும், நீதி வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் ஜூனியர் டாக்டர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து