முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூரில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலம்

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2024      உலகம்
Singapore 2024-11-03

Source: provided

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் முருகன் ஆலயங்களில் கந்த சஷ்டி திருவிழா  வரும் 8-ம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. 

மார்ஸலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தில்  கடந்த 2-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஸ்ரீ முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெற்றது. 11.15 மணிக்குக் காலை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்று இரவு 7 மணிக்கு ஏராளமான பக்தப் பெருமக்கள் பங்கேற்ற கந்தர் அனுபூதி திருப்புகழ் பாராயணமும் 7.30 மணிக்கு சத்ரு த்ருஸதி அர்ச்சனையும் மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சிகளாக நடந்தன. 

8.15 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு  பிரசாதம் வழங்கப்பட்டது. வரும் 8 -ம் தேதி திருக்கல்யாண வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. சிங்கப்பூர் பிரமுகர் ஸகி முகம்மது தீபாவளி ஒளியூட்டு விழாவைத் துவக்கி வைத்தார். மின்னொளியில் பல ஆலயங்கள் ஜொலிக்கிறது. 

சுரேஷ்குமார் தலைமையிலான ஆலய மேலாண்மைக்குழு சத்தீஸ் போன்றவர்களின் அர்ப்பணிப்புச் சேவையால் அருள் வெள்ளமும் ஒளி வெள்ளமும் சூழப் பிரகாசித்து கொண்டுள்ளது. திருக்கல்யாண வைபவம் ஈறாகப் பல்வேறு நிகழ்வுகளிலும் திரளாகப் பங்கேற்குமாறு ஆலயம் திருப்பணி குழுவினர் கேட்டு கொண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து