முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறுதியில் இந்திய வீராங்கனை

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2024      விளையாட்டு
3-Ram-58-1

Source: provided

ஜெர்மனியில் ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், டென்மார்க் வீராங்கனை ஜூலி டாவல் உடன் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய மாளவிகா 23-21, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் மாளவிகா மற்றொரு டென்மார்க் வீராங்கனையை எதிர்கொள்கிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

யங்க்கு தொடர் நாயகன் விருது 

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார். முடிவில் இந்தியா 2-வது இன்னிங்சில் 121 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி இந்தியாவை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்துள்ளது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அஜாஸ் படேல் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து வீரர் வில் யங் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் . அவர் இந்த தொடரில் 2 அரைசதம் உட்பட 244 ரன்கள் குவித்துள்ளார் இது தொடர்பாக பேசிய வில் யங் கூறியதாவது , இது மிகப்பெரியது. நான் எங்கு ஸ்கோர் செய்ய விரும்புகிறேன் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் மற்றும் என்னால் முடிந்தவரை அதைச் செய்ய வேண்டும். நான் எங்கு ஸ்கோர் செய்ய வேண்டும் என்று தெரிந்தது அதனால் மனது மிக தெளிவானது. ரன்கள் குவிக்க முடிந்தது . இது சிறப்பான உணர்வு .என தெரிவித்தார் 

பாகிஸ்தான் அணி அறிவிப்பு

முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் ஒருநாள் போட்டிகளும், அதனைத்தொடர்ந்து டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் நாளை நடைபெறும் முதல் ஒருநாள் போட்டிக்கான விளையாடும் வீரர்களை (ஆடும் லெவன்) பாகிஸ்தான் அணி அறிவித்துள்ளது.

இந்த அணிக்கு சல்மான் அலி ஆஹா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பாபர் அசாம், ஷாகின் ஷா அப்ரிடி, நசீம் ஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பாகிஸ்தான் அணி விவரம்; அப்துல்லா ஷபீக், சைம் அயூப், பாபர் அசாம், முகமது ரிஸ்வான் (கேப்டன், விக்கெட் கீப்பர்), கம்ரான் குலாம், சல்மான் அலி ஆஹா (துணை கேப்டன்), முகமது இர்பான் கான், ஷாகின் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ராப், முகமது ஹஸ்னைன்.

செஸ் போட்டி அட்டவணை 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் சர்வதேச மற்றும் இந்தியா கிராண்ட் மாஸ்டர்கள் கலந்துகொள்ளும் 2-வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நவம்பர் 5 முதல் 11 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்படுகிறது. இப்போட்டியின் மொத்த பரிசு தொகையான ரூ. 70 லட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட உள்ளது. இப்போட்டி 7 சுற்றுகள் கொண்டு ரவுண்டு ராபின் (Round Robin) முறையில் கிளாசிக்கல் செஸ் வகையில் விளையாடப்படும். இப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த அர்ஜுன் எரிகைசி, தமிழ்நாட்டை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவை சேர்ந்த லெவோன் ஆரோனின் உள்பட 8 சர்வதேச மற்றும் இந்திய வீரர்கள் பங்குபெற உள்ளார்கள்.

இந்நிலையில் சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- எங்கள் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024 ஐ பெருமையுடன் அறிவிக்கிறது. சென்னையின் முதன்மையான செஸ் போட்டியின் இரண்டாவது பதிப்பான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024 ஐ வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிகழ்வு நவம்பர் 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகிறது. சிறந்த வீரர்கள் மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் ஆகிய இரு பிரிவுகளிலும் போட்டியிடுவார்கள், அவர்களின் விதிவிலக்கான திறமைகளை வெளிப்படுத்துவார்கள். சதுரங்க ஆர்வலர்கள் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.100 செலுத்தி தங்கள் இருக்கைகளைப் பாதுகாக்க அழைக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து