முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி அறங்காவலர் குழுவில் தமிழர்கள் 2 பேர் நியமனம்

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2024      ஆன்மிகம்
Tirupati-2023-05-01

Source: provided

திருமலை : திருப்பதி தேவஸ்தானத்திற்கு 25 உறுப்பினர்கள் கொண்ட புதிய அறங்காவலர் குழுவை சந்திரபாபு நாயுடு அரசு அறிவித்துள்ளது இதில் தெலுங்கானாவில் இருந்து 5 பேரும், தமிழகத்தில் இருந்து இருவரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒவ்வொரு முறையும் புதிய அறங்காவலர் குழு அறிவிக்கும் போதெல்லாம் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆந்திர முதல்வருக்கு சிபாரிசுகள் வருவது வழக்கம். இதன் அடிப்படையில் இம்முறை தெலுங்கானாவை சேர்ந்த 5 பேருக்கு சந்திரபாபு வாய்ப்பு அளித்துள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் இருந்து 3 பேருக்கும், தமிழகத்தில் இருந்து திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி, சென்னையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், குஜராத், மகராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒருவர் என மொத்தம் 25 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அறங்காவலர் குழுவின் தலைவர் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த பி.ராஜகோபால் நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தெலுங்கு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் தலைவர் ஆவார். இந்த நியமனம் குறித்து பி.ஆர். நாயுடு கூறுகையில், 

முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு எனது மனமார்ந்த நன்றி. கடந்த ஜெகன் ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை நான் அறிவேன். 

நான் எந்தவொரு முடிவையும் தன்னிச்சையாக எடுக்காமல், அறங்காவலர் குழுவில் விவாதித்து எடுப்பேன். திருமலையில் இந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்பது எனது கருத்தாகும். இது குறித்தும் அறங்காவலர் குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து