எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : அனைத்து தனியார் சொத்துகளையும் பொது நலன் கருதி கையகப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், பொது நலனுக்காக அனைத்து தனியார் சொத்துக்களையும் கையகப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
தனியாருக்குச் சொந்தமான சொத்துக்களைக் கையகப்படுத்தி பொது நலனுக்காக பொதுப்பயன்பாட்டுக்கு உபயோகப் படுத்த மாநில அரசுகளுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 39(b), (c) அதிகாரமளிக்கிறது. இந்த உரிமையை சட்டப்பிரிவு 31C பாதுகாக்கிறது. தனியார் சொத்துக்களும் இதில் சட்டப்பிரிவில் அடங்கும் என்பதை 1978 இல் வழங்கப்பட சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு உறுதிப்படுத்தியது.
இதை எதிர்த்து சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதன்படி 1986-ம் ஆண்டு மராட்டிய அரசு, வீட்டு வசதி திட்டத்தில் திருத்தம் ஒன்றை மேற்கொண்டது. அதன்படி பொது சீரமைப்புக்காக சில குறிப்பிட்ட தனியார் சொத்துகளை அரசு கையகப்படுத்தும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து மும்பையில் உள்ள சொத்து உரிமையாளர்கள் சங்கம் ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தது. 1991-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட், ஏழைகளுக்கு வீடு வழங்குவது என்பது அரசின் கடமை என்று கூறி அம்மனுவைத் தள்ளுபடி செய்தது. இதையடுத்து 1992-ம் ஆண்டு சொத்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் இதர பணக்காரர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகள் ஒன்றாக இணைக்கப்பட்டு இதுவரை சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையிலிருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் முதல் சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இந்த வழக்கானது விசாரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நடந்த வழக்கு விசாரணையில், பொது நலனுக்காகவே இருந்தாலும் அனைத்து தனியார் சொத்துக்களையும் அந்த சட்டப்பிரிவு வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநில அரசுகள் கைப்பற்ற முடியாது என்று சுப்ரீம் கோர்ட் அமர்வு தெரிவித்துள்ளது.
சந்திரசூட் உள்ளிட்ட 7 நீதிபதிகள் இந்த தீர்ப்பை ஆதரித்த நிலையில், அமர்வில் இடம்பெற்ற நீதிபதி சுதான்சு துலியா இந்த தீர்ப்பில் இருந்து மாறுபட்டார். முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் நடந்த விசாரணையின்போது , பொது நலனுக்காக தனிநபரின் சொத்தை அரசு கையகப்படுத்த முடியாது என்று கூறுவது ஆபத்தானது என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார். இதன்படி அரசியல் சாசன பிரிவு 39(B) பிரிவின் கீழ் தனியாருக்கு சொந்தமான நிலத்தை அரசு கையகப்படுத்தலாம் என்று நீதிபதி கிருஷ்ண ஐயர் அளித்த தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 6 days ago |
-
ஆசிரியர்களுக்கு ஊதியம் தர பணமில்லை: பாகிஸ்தானில் மூடப்படும் பள்ளிக்கூடங்கள்
05 Nov 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாநிலத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளம் தர பணமில்லாததால் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.
-
வாயு கசிவு ஏற்பட்ட திருவொற்றியூர் தனியார் பள்ளிக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு
05 Nov 2024திருவொற்றியூர் : வாயு கசிவு ஏற்பட்ட திருவொற்றியூர் தனியார் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
போலீஸ் அதிகாரியை மிரட்டியதாக புகார்: மத்திய அமைச்சர் குமாரசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு
05 Nov 2024பெங்களூரு, போலீஸ் அதிகாரியை மிரட்டியதாக மத்திய அமைச்சர் குமாரசாமி மற்றும் அவரது மகன் நிக்கிக் குமாரசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: தமிழக அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு
05 Nov 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 35-வது கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்க தமிழக அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
பிரதமர் மோடிக்காக நிறுத்தப்பட்ட ஹேமந்த் சோரனின் ஹெலிகாப்டர்: ஜனாதிபதியிடம் ஜே.எம்.எம். கட்சி புகார்
05 Nov 2024ராஞ்சி, பிரதமர் நரேந்திர மோடியின் ஜார்க்கண்ட் வருகையின் போது பாதுகாப்பு காரணம் காட்டி, மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் ஹெலிகாப்டரை எடுக்க அனுமதி அளிக்காமல் தாமதம் செய்தத
-
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
05 Nov 2024சென்னை : தமிழகத்தில் நாளை 7-ம் தேதியன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்
-
சாத் பூஜை: நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
05 Nov 2024புது டெல்லி, சாத் பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நில முறைகேடு விவகாரம்: இன்று லோக் ஆயுக்தா விசாரணைக்கு ஆஜராவேன்: சித்தராமையா
05 Nov 2024மைசூரு, லோக் ஆயுக்தா விசாரணைக்கு இன்று காலை ஆஜராவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார் ",
-
நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்
05 Nov 2024மும்பை, பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பார்லி. குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25-ம் தேதி தொடங்குகிறது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தகவல்
05 Nov 2024புது டெல்லி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25-ம் தேதி தொடங்குகிறது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார்.
-
கோவை தகவல் தொழில்நுட்பக் கட்டிடம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
05 Nov 2024கோவை : கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில், 158 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் 2.94 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை முதல்வர
-
மும்பை, மராட்டிய மாநிலத்தின் புதிய டி.ஜி.பி.யாக சஞ்சய் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
05 Nov 2024மராட்டிய சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 20-ம் தேதி நடக்கிறது.
-
தி.மு.க. கூட்டணி தொடரும்: திருமாவளவன் திட்டவட்டம்
05 Nov 2024திருச்சி : மதச்சார்பற்ற கூட்டணி உருவாக்கியதில் எங்களுக்கு பங்கு உண்டு. அது எங்கள் கூட்டணி. எனவே, எங்களுக்கான கூட்டணியை சிதறடிக்க வேண்டிய தேவை வி.சி.க.வுக்கு இல்லை.
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் யாருக்கு வெற்றி? தாய்லாந்து நீர்யானையின் கணிப்பு வீடியோ வைரல்
05 Nov 2024பாங்காக், அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப், கமலா ஹாரிஸ் இருவரில் யார் வெற்றி பெறுவார் என்று தாய்லாந்து நீர்யானை கணித்துள்ள வீடியோ வைரலாகி இருக்கிறது.
-
மேடையில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன்
05 Nov 2024ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடிப்பில் கடந்த அக்டோபர் 31 ல் வெளியாகி இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமரன் படம்
-
பொது நலன் கருதி மாநில அரசு தனியார் சொத்துகளை கையகப்படுத்த முடியாது : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
05 Nov 2024புதுடெல்லி : அனைத்து தனியார் சொத்துகளையும் பொது நலன் கருதி கையகப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், பொது நலனுக்காக அனைத்து தனியார் சொத்துக்களையும் கைய
-
தங்கம் விலை சற்று சரிவு
05 Nov 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
ராகவா லாரன்ஸ் படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்
05 Nov 2024லோகேஷ் கனகராஜ் எழுத்தில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் அறிமுகமாகிறார்.
-
பி.எட் சிறப்பு கல்வி படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் : தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை. அறிவிப்பு
05 Nov 2024சென்னை : பி.எட் சிறப்பு கல்வி படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
-
கோவையில் தங்க நகை பட்டறையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்
05 Nov 2024கோவை, கோவையில் தங்க நகை பட்டறையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து பொற்கொல்லர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
-
பெண்ணை கொலை செய்து சூட்கேசில் கொண்டு வந்த வழக்கில் திடீர் திருப்பம்: தந்தை, மகளை கைது செய்து விசாரணை
05 Nov 2024திருவள்ளூர், பெண்ணை கொலை செய்து சூட்கேசில் கொண்டு வந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தந்தை, மகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு: வருத்தம் தெரிவித்தார் நடிகை கஸ்தூரி
05 Nov 2024சென்னை : அனைவரின் நலன் கருதி கடந்த 3-ம் தேதி தெலுங்கு மக்களை குறிப்பிட்டு நான் பேசிய கருத்துகளை திரும்ப பெறுகிறேன்.
-
தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்: அறிமுகம் செய்தது தமிழ்நாடு அரசு
05 Nov 2024சென்னை : தொல்குடியினர் புத்தாய்வு திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
-
தெலுங்கானாவில் இன்று முதல் சாதிவாரி கணக்கெடுப்பு துவக்கம்
05 Nov 2024ஐதராபாத், தெலுங்கானாவில் இன்று முதல் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கவுள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு பணி நவம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
அடுத்த ஜனாதிபதி கமலாவா - டொனால்டு ட்ரம்பா? அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு
05 Nov 2024வாஷிங்டன், அடுத்த ஜனாதிபதி கமலாவா - டொனால்டு ட்ரம்பா? என்பதை முடிவு செய்யும் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன.