முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமா? விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2024      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பே, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுமா? என்று கேள்வி எழுந்துள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்த தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வரும் டிசம்பருடன் காலாவதியாகிறது. எனவே 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா? அல்லது ஒட்டு மொத்த உள்ளாட்சி அமைப்புகளையும் கலைத்துவிட்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போதைய கணக்குப்படி, 2019 டிசம்பரில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களுக்கு 2024 டிசம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும். 2021 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடந்த உள்ளாட்சிகளுக்கு 2026 செப்டம்பரில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது தான் விதி. உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் வெற்றி, தோல்வி என்பது 2026 சட்டசபை தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்கும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 

தற்போதுவரை ஒட்டுமொத்தமாக உள்ளாட்சி தேர்தலை முன்கூட்டியே நடத்தப்படுவது குறித்து எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை. அதேநேரத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, சரிபார்ப்பு பணியை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்த தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து