முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனுதாரரும், குற்றஞ்சாட்டப்பட்டவரும் சமரசம் ஆனாலும் பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது: ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

புது தில்லி, மனுதாரரும், குற்றஞ்சாட்டப்பட்டவரும் சமரசமாகச் சென்றுவிட்ட காரணத்தால், பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை ரத்து செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மனுதாரரும், குற்றவாளியும் சமரசம் செய்துகொண்டுள்ளனர். இது குறித்து குற்றவாளி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை நாடி, வழக்கை ரத்து செய்யுமாறு கோரினார். மனுதாரரின் விளக்கத்தை ஏற்று, வழக்கை ரத்து செய்வதாக ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால், இது குறித்து மூன்றாம் நபர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக புகார் அளித்த மனுதாரரும், குற்றஞ்சாட்டப்பட்டவரும் சமரசமாகச் சென்றுவிட்டதால், பாலியல் வழக்கை ரத்து செய்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி சி.டி. ரவிகுமார் மற்றும் பி.வி. சஞ்சய் குமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், பாலியல் குற்றச்சாட்டு வழக்கை ரத்து செய்த உத்தரவை ரத்து செய்கிறோம், முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றவியல் நடைமுறைகளின்படி, சட்டத்துக்கு உள்பட்டு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடுகிறோம் என்று தெரிவித்துள்ளனர். இந்த வழக்கின் நிலை குறித்து வேறு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் சுப்ரீம் கோர்ட் கூறிவிட்டது. ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை கடந்த ஆண்டு பிறப்பித்த நிலையில், சுப்ரீம் கோர்ட் நேற்று இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து