முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2024      விளையாட்டு
7-Ram-58-4

Source: provided

ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது . அந்த அணியின் குர்பாஸ் 5 ரன்களுக்கும் , செட்குல்லா அடல் 21 ரன்களுக்கும், ரஹ்மத் 2 ரன்களுக்கும் , அஸ்மத்துல்லா ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் முகமது நபி, ஷாஹிதி இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் தொடர்ந்து நிலைத்து விளையாடி இருவரும் அரைசதம் அடித்தனர் .

இறுதியில் ஆப்கானிஸ்தான் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 235 ரன்கள் எடுத்தது. நபி 84 ரன்கள் , ஷாஹிதி 52 ரன்கள் எடுத்தனர். வங்காளதேசம் தரப்பில் முஸ்தாபிசுர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 236 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்காளதேச அணி ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 34.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வங்காளதேசம் 10 விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.இதன் மூலம் 92 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அல்லா கசன்ஃபர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ரிஷப் பண்ட் குறித்து கம்மின்ஸ்

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் ரிஷப் பண்ட் முக்கிய வீரராக இருப்பார் என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரிஷப் பண்ட் குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் சும்மின்ஸ் கூறியதவாது , ரிஷப் பண்ட் போட்டியில் வேகமான மாற்றத்தை ஏற்படுத்துபவர். ஆஸ்திரேலியாவில் அவர் இறுதியாக விளையாடியபோது அது அவருக்கு நல்ல தொடராக அமைந்தது. அவர் களத்தில் இருப்பது எங்கள் அணிக்கு ஆபத்தானது என்று எங்களுக்கு தெரியும். எனவே பார்டர் - கவாஸ்கர் தொடரில் அவரின் விக்கெட்டை விரைவில் வீழ்த்த நாங்கள் முயற்சி செய்வோம். எங்களிடம் சில நல்ல திட்டங்கள் உள்ளன. என தெரிவித்துள்ளார் 

தொடரை வென்ற மே.இ.தீவுகள் 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. இந்நிலையில், ஒருநாள் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் வில் ஜேக்ஸ் ஆகியோர் களம் இறங்கினர்,

இதில் பில் சால்ட் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் ஜேக்ஸ் 5 ரன், ஜோர்டன் காக்ஸ் 1 ரன், லிவிங்ஸ்டன் 6 ரன், சாம் கர்ரன் 40 ரன் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து மவுஸ்லி, பில் சால்டுடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. இதில் இருவரும் அரைசதம் அடித்தனர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் சால்ட் 74 ரன்னிலும், மவுஸ்லி 57 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 43 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 8விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் ஒருநாள் தொடரை 2-1 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.  

கேப்டனுடன் அல்ஜாரி வாக்குவாதம்

இங்கிலாந்து - மேற்கிந்திய தீவு அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பில் சால்ட் 74 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 43 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றியது. பிரண்டன் கிங் 102 ரன்களும், கீசி கார்ட்டி 128 ரன்களும் எடுத்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியில் வேகப்பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப் 10 ஓவர்கள் பந்துவீசி ஒரு மெய்டனுடன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.முதலாவது இன்னிங்ஸில் 4 வது ஓவரின் போது இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோர்டன் காக்ஸ் பேட்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது அல்ஜாரி ஜோசப் பவுலிங் செய்யவந்தபோது இரண்டு பேர் ஸ்லிபில் இருந்தனர். அல்ஜாரி ஜோசப் முதல் பந்தை வெளியே வீசினார். பேட்டர் அதை அடிக்கவில்லை. அடுத்த பந்தின் போது ஸ்லிப் இருந்த வீரரை பாய்ண்ட் திசையில் நிற்க வைத்துள்ளார் கேப்டன் கோப். இதனால், கேப்டனுக்கும், அல்ஜாரி ஜோசப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அந்த ஓவரை மெய்டன் ஓவராக வீசினார். பீல்டிங் செட் செய்வது குறித்து கேப்டன் ஷாய் கோப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அல்ஜாரி ஜோசப் எதுவும் தெரிவிக்காததால் பாதியிலேயே மைதானத்தைவிட்டு வெளியேறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து