முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்வானிக்கு பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024      இந்தியா
Advani-Modi

Source: provided

புதுடெல்லி : பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் துணை பிரதமரும், பா.ஜ.க. முன்னாள் தலைவருமான அத்வானி, நேற்று தனது 97-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு பா.ஜ.க. தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில், அத்வானிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, 

அத்வானியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத்திற்கு அவர் செய்த சிறந்த சேவைக்காக இந்த ஆண்டு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது கூடுதல் சிறப்பு. 

இந்தியாவின் மிகவும் போற்றப்படும் அரசியல்வாதிகளில் ஒருவரான அவர், இந்தியாவின் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்துள்ளார். அவருடைய அறிவுத்திறன் மற்றும் வளமான நுண்ணறிவுக்காக அவர் எப்போதும் மதிக்கப்படுகிறார். 

பல ஆண்டுகளாக அவருடைய வழிகாட்டுதலை பெற்றதில் நான் அதிர்ஷ்டசாலி. அவரது நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து