முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணமதிப்பிழப்பு நடவடிக்கை: 8 ஆண்டுகள் நிறைவடைந்தது

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024      இந்தியா
RBI 2023-04-27

Source: provided

புதுடெல்லி : பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்தது.

நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பா் 8-ஆம் தேதி மேற்கொண்டது. அதன்படி, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அன்று இரவு ஊடகத்தின் வாயிலாக பேசிய பிரதமர் மோடி, இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவித்தார். இதனால் சாமானிய மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகினர். அதன்பின்னர் புதிதாக ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்கவும், பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கவும், இணையவழி பணப் பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. ஆனால், பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது மக்களிடம் இருந்த ரொக்கத் தொகையைவிட அதிகமாக இருப்பதாக 2022ல் ஆர்பிஐ தெரிவித்தது.

பணமதிப்பிழப்பு அறிவிக்கும்போது மக்களிடம் 17. 7 லட்சம் கோடி ரூபாய் ரொக்கமாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி நிலவரப்படி 30.88 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனிடையே மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் 2023 ஜனவரி மாதம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. இந்த பணமதிப்பிழப்பு கொண்டுவரப்பட்டு நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து