முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சை பெரிய கோவிலில் சதய விழா தொடங்கியது

சனிக்கிழமை, 9 நவம்பர் 2024      ஆன்மிகம்
Thanjavur 2024-04-06

தஞ்சாவூர், தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1039-வது சதய விழா மங்கள இசையுடன் நேற்று தொடங்கியது. 

தஞ்சை பெரிய கோவிலை கட்டி மாமன்னன் ராஜராஜ சோழன் உலகிற்கே பெருமை சேர்த்தார். இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்கிறது. மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா 2 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி 1039-வது சதயவிழா அரசு விழாவாக நேற்று காலை இறைவணக்கம், மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து களிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கம் நடைபெற்றது. இதையடுத்து தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. 

சதய விழாக்குழு தலைவர் செல்வம் வரவேற்றார். விழாவிற்கு தலைமை தாங்கி கலெக்டர் பிரியங்கா பங்கஜம் சிறப்புரையாற்றினார். பின்னர் சென்னை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் தொடக்க உரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு அரண்மனை பரம்பரை தேவஸ்தானம் அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் கோபால கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசந்திரன், முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவன், பேராசிரியர் சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பழநி ஆதீனம் குருமகா சந்நிதானம் சாது சண்முக அடிகளார் அருளுரை வழங்கினார். அதனை தொடர்ந்து வரலாறாக வாழும் மாமன்னன் ராசராசன் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதையடுத்து பிற்பகலில் நாதசுரம், பரதநாட்டியம், யாழ் இசை, வில்லுப்பாட்டு ஆகியவை அடுத்தடுத்து நடைபெற்றன. இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் 2-ம் நாளான இன்று  காலை 6.30 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. காலை 7 மணிக்கு கோவில் பணியாளர்களுக்கு கயிலை மாசிலா மணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை புத்தாடைகள் வழங்குகிறார். 

காலை 7.20 மணிக்கு அரசு சார்பில் மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. காலை 8 மணிக்கு 100-க்கும் மேற்பட்ட ஓதுவாமூர்த்திகள் திருமுறை பண்ணுடன் ராஜவீதிகளில் திருஉலா நடைபெறும். 

காலை 9.10 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடக்கிறது. மதியம் 1.30 மணியளவில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெறும். தொடர்ந்து 1039 கலைஞர்கள் பங்குபெறும் மாபெரும் நாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரிய கோவில் முன்பும் அலங்கார தோரண வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. பெரியகோவில் அருகே உள்ள பாலம், சோழன் சிலை பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து