முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

40 ஆண்டு கால திரைப்பயணத்தில் சிம்பு

திங்கட்கிழமை, 11 நவம்பர் 2024      சினிமா
Simbu 2024-11-11

Source: provided

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று பான் இந்திய நடிகராக உயர்ந்து இருக்கும் சிலம்பரசன் தனது கலை உலக பயணத்தை 40ஆம் ஆண்டை தாண்டி வெற்றிகரமாக தொடர்கிறார். குழந்தை நட்சத்திரம் - இளம் நாயகன் - பாடலாசிரியர் - கதாசிரியர் - திரைக்கதை ஆசிரியர் - இசையமைப்பாளர் - பின்னணி பாடகர் - இயக்குநர்  என திரையுலகத்தின் அனைத்து துறைகளிலும் தன் திறமையை நிரூபித்துள்ளார்.

1984 ஆம் ஆண்டில் 'உறவை காத்த கிளி' எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 'மன்மதன்', 'வல்லவன்' , 'விண்ணைத்தாண்டி வருவாயா' ஆகிய படங்கள் மூலம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று 'மாநாடு', 'வெந்து தணிந்தது காடு', என தொடர் கமர்சியல் வெற்றியை அளித்த சிலம்பரசன். தற்போது கமல் மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

வாரிசு நடிகர் என்ற அடையாளத்துடன் திரைப் பயணத்தைத் தொடங்கினாலும் தன்னுடைய தனித்துவமான திறமையாலும், உழைப்பினாலும் முத்திரை பதித்த இயக்குநராகவும்.. படைப்பாளியாகவும் உயர்ந்துள்ளார். தொடர்ந்து வெற்றிகரமாக திரைப் பயணத்தை தொடர வேண்டும் என தினபூமி குழுமம் வாழ்த்துகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து