முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்ப் நியமித்த அமைச்சர்களுக்கு பைப் வெடிகுண்டு மிரட்டல் அமெரிக்காவில் பரபரப்பு

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2024      உலகம்
Trump-2024-11-28

வாஷிங்டன், டிரம்ப் மந்திரி சபையில் இடம்பெற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்ந்து பைப் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து  எப்.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. 

அமெரிக்காவில் கடந்த 5-ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி, குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.  

இதனை தொடர்ந்து, பல்வேறு பதவிகளுக்கு ஆட்களை அவர் நியமித்து வருகிறார்.  அவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களும் அடங்குவர்.  இதன்படி, கேரளாவில் இருந்து புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி, டிரம்ப் அமைச்சரவையில், இடம் பெற்றுள்ளார்.  

உலக பணக்காரர்களில் ஒருவரான டுவிட்டர் தளத்தின்  உரிமையாளரான எலான் மஸ்க்குடன் இணைந்து அவர் பணியாற்றுவார் என டிரம்ப் கூறினார்.  இந்த சூழலில், அவருடைய மந்திரி சபையில் இடம்பெற்ற நபர்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தபடி உள்ளது.  

எலைஸ் ஸ்டெபானிக் என்பவரை ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக டிரம்ப் அறிவித்த நிலையில், அவருடைய வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது என முதன்முதலாக வெளியே கூறினார்.  இது மற்றவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

அவர், தன்னுடைய கணவர் மற்றும் 3 வயது மகனுடன் வாஷிங்டன் டி.சி. நகரில் இருந்து நியூயார்க் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது, இந்த மிரட்டல் செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டது.  

இதனை தொடர்ந்து, பாதுகாப்பு மந்திரியாக நியமனம் செய்யப்பட்ட பீட் ஹெக்சேத், அவருக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது என உறுதிப்படுத்தினார்.  இது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 

பைப் வெடிகுண்டுக்கான நம்பத்தக்க அச்சுறுத்தல் வந்துள்ளது என கூறி வீட்டுக்கு நேற்று முன்தினம் காலை போலீஸ் அதிகாரி ஒருவர் வந்து கூறினார்.  அப்போது, வீட்டில் என்னுடைய 7 குழந்தைகள் தூங்கி கொண்டிருந்தனர் என தெரிவித்து உள்ளார்.  

இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்.  டிரம்ப் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொடர்ந்து பணியாற்றும்படி கேட்டு கொண்டார்.  அதனை நான் மேற்கொள்ள உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.  

இதே போன்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு கழகத்தின் நிர்வாகியாக டிரம்ப் நியமித்துள்ள லீ ஜெல்டின் என்பவரும், பைப் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என உறுதிப்படுத்தி உள்ளார்.  இது பற்றி எப்.பி.ஐ. விசாரித்து வருகிறது.  

அவர்கள் கூறும் போது, வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டவர்களின் வீடுகளுக்கு உடனடியாக போலீசார் செல்வதற்காக இதுபோன்ற வெடிகுண்டு புரளிக்கான அழைப்புகள் விடப்படுகின்றன என தெரிவித்தனர்.  

இதுவரை பாதுகாப்பு, வீட்டு வசதி, விவசாயம் மற்றும் தொழிலாளர் துறை மற்றும் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் உள்பட டிரம்ப் தேர்ந்தெடுத்த 9 பேருக்கு மிரட்டல் விடப்பட்டு உள்ளது.  

இதுபற்றி டிரம்பின் குழுவில் உள்ள பெண் செய்தி தொடர்பாளரான கரோலின் லீவிட் கூறும் போது, 

டிரம்ப் நியமித்தவர்களுக்கு எதிராக, அவர்களின் உயிருக்கும், அவர்களுடன் வசிப்பவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் விடப்பட்டு உள்ளது.  அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீசார் உடனடியாக செயல்பட்டனர் என கூறியுள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து