முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா மாநில முதல்வராக இன்று பதவியேற்கிறார் தேவேந்திர பட்னாவிஸ்

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      இந்தியா
Phadnavis 2024-12-04

மும்பை, தேவேந்திர பட்னாவிஸ் பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து மகாராஷ்டிரா மாநில முதல்வராக அவர் இன்று பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். 

மகாராஷ்டிராத்தில் பா.ஜ.க. தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றியை கண்டபோதிலும், ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வந்தது. கூட்டணியில் அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதால் முதல்வர் பதவி ஏற்க பா.ஜ.க. விரும்பியது.  அதே நேரத்தில் முதல்வர் ஷிண்டேயின் முகத்தை முன்வைத்தே தேர்தலை சந்தித்ததாகவும், இதனால் அவர் முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று சிவசேனாவினர் விரும்பினர். 

ஆனால் இதனை எற்க  பா.ஜ.க. மறுத்தது.  அதன்பிறகு நடத்திய பேச்சுவார்த்தையில் முதல்வர் பதவியை பா.ஜ.க.வுக்கு வழங்க தலைவர்கள் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது. முதல்வர்  பதவியை தங்களுக்கு தராவிட்டால், உள்துறை, நிதி இலாகாக்கள் மற்றும் சபாநாயகர் பதவியை தங்களது கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி இருந்தது.  ஒருவேளை அப்படி தராவிட்டால் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க சிவசேனா விரும்புவதாகவும் பா.ஜ.க. தலைவர்களிடம் ஷிண்டே தெரிவித்திருந்தார். அதிகார பகிர்வு விஷயத்தில் பா.ஜ.க. மீதான அதிருப்தியால் ஷிண்டே மாநில தலைநகரை விட்டு சொந்த கிராமத்துக்கு சென்றதாக கூறப்பட்டது. 

இதனிடையே புதிய அரசு பதவி ஏற்பு விழா இன்று வியாழக் கிழமை நடைபெறும் என்று பா.ஜ.க. அறிவித்திருந்தது. இந்த சூழலில் பதவி ஏற்பு விழாவுக்கு முன்னதாக நேற்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.  அதில் பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தின் அடுத்த முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்க பா.ஜ.க. மத்திய குழு ஒப்புதல் அளித்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிராத்தின் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவி ஏற்க உள்ளார். விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அவரது முன்னிலையில் கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்பு செய்து வைக்கிறார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள், பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாரதிய ஜனதா மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து