முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பாக சேவை புரிந்த மாற்றுத்திறனாளிகள் 16 பேருக்கு விருது: முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2024      தமிழகம்
CM-1--2024-12-05

சென்னை, சிறப்பாக சேவை புரிந்த மாற்றுத்திறனாளிகள் 16 பேருக்கு மாநில அளவிலான விருதுகளை  வழங்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவி உபகரணங்கள் திட்டத்தின் பொன் விழா ஆண்டையொட்டி, தமிழகம்  முழுவதும் உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்திருக்கும் சுமார் 26,000 பேருக்கு 130 கோடி ரூபாய் மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கான பெட்ரோல் ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

அதன் அடையாளமாக இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 211 கோடி ரூபாய் செலவில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு சேவைகள் வழங்கிடும் வகையில், மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமையப் பெறவுள்ளன. இம்மையங்களுக்கு நேரடியாக வரமுடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு விழுதுகள் என்ற முதல் மறுவாழ்வு சேவை ஊர்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இவ்வூர்திகள் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் பயணிக்கும். அவ்வழித்தடங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் தேவைகளுக்கேற்ப இயன்முறை, கேட்டல் மற்றும் பேச்சு பயிற்சி, சிறப்புக் கல்வி ஆகிய மறுவாழ்வு சேவைகள் இவ்வூர்திகளில் வழங்கப்படும்.

மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும சிறந்த சாதனை புரிந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக மாநில அளவிலான விருதுகளை 16 நபர்களுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் சென்னை, கே.கே. நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனை வளாகத்திற்குள் 15 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புறவுலக சிந்தனையற்ற நபர்களுக்கான ஒப்புயர்வு மையத்தின் சேவைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் இயங்கும் 35 ஆரம்ப நிலை இடையீட்டு மையங்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் மூலம் வலுப்படுத்தி விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்களாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து