முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களை கவர்ந்த டாப் 100 நகரங்கள் பட்டியலில் டெல்லிக்கு 74-வது இடம்

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2024      உலகம்
Delhi 2023 08 14

லண்டன், மக்களை கவர்ந்த டாப் 100 நகரங்கள் பட்டியலில் டெல்லி 74-வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களை கவர்ந்த நகரங்கள் தொடர்பாக ஈரோமானிட்டர் இன்டர்நேஷனல் என்னும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு முதல் 100 நகரங்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்படுகிறது. 

பொருளாதாரம், தொழில்துறை மற்றும் சுற்றுலாவின் செயல்பாடுகள், சுற்றுலா உள்கட்டமைப்பு, சுகாதாரம், பாதுகாப்பு, நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கண்கெடுப்பு நடத்தப்படுகிறது. 

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், பாரிஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 4-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.  மேட்ரிட் 2-வது இடத்திலும், டோக்கியோ 3-வது இடத்திலும், ரோம் 4-வது இடத்திலும், மிலன் 5-வது இடத்திலும் உள்ளன. 

நியூயார்க் (6), ஆம்ஸ்டர்டாம்(7), சிட்னி(8), சிங்கப்பூர்(9), பார்சிலோனா(10) ஆகிய நகரங்கள் டாப்-10 பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்ற நாடுகள் ஆகும். இந்தியாவைப் பொறுத்தவரையில் முதல் 100 இடங்களில் தலைநகர் டெல்லி மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் டெல்லி 74-வது இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் கெய்ரோ உள்ளது. ஜுஹாய் (சீனா) 99-வது இடத்திலும், ஜெருசலேம் 98-வது இடத்திலும் உள்ளது. 

கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் போன்ற முக்கிய நிகழ்வுகளை நடத்தியது மற்றும் சுற்றுலா சலுகைகளை வழங்கியதால் மக்களை கவர்ந்த நகரங்களில் பாரிஸ் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதாக ஈரோமானிட்டர் இன்டர்நேஷனல் சுட்டிக்காட்டி உள்ளது. 

வெளிநாடுகளில் இருந்து அதிகமாக பயணிகள் வரக்கூடிய நகரங்களைப் பொருத்தவரை, இந்த ஆண்டில் 32 மில்லியன் சர்வதேச வருகையுடன் பாங்காக் நகரம் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து இஸ்தான்புல் (23 மில்லியன்), லண்டன் (21.7 மில்லியன்), ஹாங்காங் (20.5 மில்லியன்), மற்றும் மெக்கா (19.3 மில்லியன்) ஆகிய நகரங்கள் டாப்-5 நாடுகளில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

அன்டால்யா 6-வது இடத்திலும்,  துபாய் 7-வது இடத்திலும், மெக்கா 8-வது இடத்திலும், பாரிஸ் 9-வது இடத்திலும், கோலாலம்பூர் 10-வது இடத்திலும் உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து