முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மஞ்சப்பை திட்டத்தால் நெகிழி பயன்பாடு குறைவு: தமிழகம் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் முன்னோடி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2024      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும் மஞ்சப்பை திட்டத்தால் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழியின் பயன்பாடு கணிசமாக குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்

சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் 2-வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,  இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக உள்ளது. 

நீண்ட கடற்கரையை பாதுகாக்க தமிழ்நாடு நெய்தல் மீட்பு இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் காலநிலை மாற்றம் தொடர்பாக தமிழகத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப நம்மை தக்கவைத்துக் கொள்ளும் நடவடிக்கையை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் இதுவரை 8.3 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. கடல் அரிப்பை தடுக்க அலையாத்தி காடுகள் உருவாக்கப்படுகின்றன. 

ரூ.500 கோடியில் ஊரகப் பகுதியில் 5,000 நீர்பாசனங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் மஞ்சப்பை திட்டத்தால் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழியின் பயன்பாடு கணிசமாக குறைந்துள்ளது. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் தமிழகம் இந்தியாவிலேயே 3-வது இடத்தில் உள்ளது. நீரேற்று நிலையங்களை மேம்படுத்த திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. இயற்கை வளத்தை பாதிக்காத வகையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வெள்ள அபாயங்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து