முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணிப்பேட்டையில் ரூ. 19.21 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகள் துணை முதல்வர் உதயநிதி அடிக்கல் நாட்டினார்

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2024      தமிழகம்
Udayanidhi-1 2023-10-15

Source: provided

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று  கலைஞர் நூற்றாண்டு பொன் விழாவினை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற விழாவில் பொதுப்பணித் துறை சார்பில் ரூபாய் 19.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள  13 அரசு பள்ளிக் கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். 

மேலும் பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 9.15  கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 28 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 288 ஊராட்சிகளுக்கு, தலா 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 364 கலைஞர் விளையாட்டு உபகரண தொகுப்புகளையும் வழங்கினார். 

அதை தொடர்ந்து பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 7,165 பயனாளிகளுக்கு 37.79 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 700 பயனாளிகளுக்கு 8.12 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூபாய் 18.36 லட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம், பழங்குடியினர் இல்லம் கட்டுவதற்கான ஆணைகளையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 

தொடர்ந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 2,229 மகளிருக்கு, ரூபாய் 17.98 கோடிக்கான வங்கி கடனுதவி காசோலைகளையும், உணவுப் பொருள் மற்றும் வழங்கல் துறை சார்பில் 178 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும் அவர்  வழங்கினார்.

மேலும் கூட்டுறவுத் துறை சார்பில் 716 மகளிர்சுய உதவிக் குழுக்களுக்கு 7.43 கோடி ரூபாய்க்கான கடனுதவி காசோலைகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்70 பயனாளிகளுக்கு1.09 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டஉதவிகளையும், தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூபாய் 3.57 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் துணை முதல்வர் வழங்கினார்.

வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு 2.23 லட்சம் ரூபாய் மானியத்தில் பவல்டிரில்லரையும் அவர் வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 50 பயனாளிகளுக்கு மொத்தம் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான செயற்கை கால்கள், இருசக்கர வாகனம் மற்றும் வீல்சேர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு தொழில் வணிகத் துறை, மாவட்ட தொழில் மையம் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 36 பயனாளிகளுக்கு தொழில் தொடங்க 77.76 லட்சம் ரூபாய் மானிய உதவிகளையும், தாட்கோ சார்பில் நன்னிலம் மகளிர் நில உடமைத்திட்டம் மற்றும் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் சமூக பொருளாதார தொழில் முனைவு திட்டத்தின் கீழ் 22 பயனாளிகளுக்கு 48.08 லட்சம் ரூபாய்க்கான மானிய உதவிகளையும் அவர் வழங்கினார். 

தொடர்ந்து முன்னோடி வங்கி சார்பில் 8 பயனாளிகளுக்கு கறவைமாடுகள் வாங்க 8 லட்சம் ரூபாய்க்கான கடனுதவிகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூபாய் 33 ஆயிரம் மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் 33 பயனாளிகளுக்கு ரூபாய் 2.65 இலட்சத்திற்கான மானிய உதவிகளையும், நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில் 227 தூய்மைகாவலர்களுக்கு ரூபாய் 6.81 லட்சம் மதிப்பிலான பாதுகாப்புஉபகரணங்களையும் என மொத்தம் 7,165 பயனாளிகளுக்கு ரூ. 37.79 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து