முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்லடம் படுகொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் அண்ணாமலை வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2024      தமிழகம்
Annamalai 2024-01-16

Source: provided

திருப்பூர்: பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

கடந்த நவம்பர் 29-ம் தேதி திருப்பூர் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.   இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.  அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, 

 மக்களின் உயிருக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை போய் விடும். இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி, ஜனாதிபதிக்கும், பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதுவோம். முதல்வர் ஸ்டாலினுக்கும் கடிதம் எழுதுவோம்.

தமிழக போலீசாருடன் சி.பி.ஐ. இணைந்து கொலைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். இதுவரை இந்தியாவிலேயே இது போன்று கிடைக்காத மாதிரி தண்டனை மிக வேகமாக வழங்க வேண்டும். 

ஆயுதங்களை தூக்குபவர்கள் எல்லோருக்கும் முதலும், முடிவுமாக இந்தத் தண்டனை இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் கருத்து.  பத்திரிக்கையாளர்களும் இந்த விஷயத்தில் உறுதுணையாக இருக்க வேண்டும். அப்போது தான் நியாயம் கிடைக்கும். இதன்மூலம், ஜனநாயகத்தின் மீது நமக்கு நம்பிக்கை வரும். 

போதை கலாசாரத்தை ஒழிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. போதை இல்லாமல் யாராவது இவ்வளவு கொடூரமான கொலைகளை செய்திருப்பார்களா? இளைஞர்கள் நகரங்களை நோக்கி சென்று விட்டதால், கிராமங்களில் வயதானவர்கள் தான் இருக்கிறார்கள். 

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது.  குறிப்பாக, போலீசார் இரவு நேரங்களில் கிராமப்புறங்களில் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள். கிராமப்புற காவல்நிலையங்களுக்கு முதல்வர் ரோந்து வாகனங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து