முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 நாட்கள் பயணமாக ரஷ்யா செல்கிறார் ராஜ்நாத் சிங்

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2024      இந்தியா
Rajnath-Singh 2023-11-14

புதுடெல்லி, 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று ராஜ்நாத் சிங் ரஷியா செல்ல உள்ளார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று ரஷியா செல்ல உள்ளார். ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போர்க்கப்பல் 'ஐ.என்.எஸ். துஷில்' இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் திங்கள்கிழமை கலினின்கிராட்டில் நடைபெற உள்ளது. இதில் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதியும் பங்கேற்க உள்ளார். உலக அளவில் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட போர்க்கப்பல்களில் ஒன்றாக கருதப்படும் 'ஐ.என்.எஸ். துஷில்' போர்க்கப்பல், இந்திய பெருங்கடலில் இந்திய கடற்படையின் செயல்பாட்டுத் திறனை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது ரஷிய சுற்றுப்பயணத்தின்போது ராஜ்நாத் சிங், மாஸ்கோவில் வரும் 10-ந்தேதி நடைபெற உள்ள இந்தியா-ரஷ்யா அரசு ஆணையத்தின் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 21-வது கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களுக்கு பிரதமர் மோடி ரஷியாவிற்கு பயணம் செய்து அந்நாட்டின் அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில், இந்தியா-ரஷியா இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து