முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டர்டாம் தேவாலயம் 5 ஆண்டுகளுக்கு பின் திறப்பு : அதிபர் மேக்ரான், டிரம்ப், ஜெலன்ஸ்கி பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2024      உலகம்
France 2024-12-08

Source: provided

பாரிஸ் : பாரிசில் நாட்டார்டாம் தேவாலயம் 5 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிபர்கள் டிரம்ப், மேக்ரான், ஜெலன்ஸ்கி ஆகியோர் கலந்து கொண்டனர். 

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள நாட்டர்டாம் தேவாலயத்தில் கடந்த 2019-ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த தேவாலயம் கடுமையாக சேதம் அடைந்தது. இதையடுத்து, பிரான்ஸ் அதிபரான இம்மானுவல் மேக்ரோன் தேவாலயத்தை 5 ஆண்டுகளுக்குள் புனரமைப்பு செய்வதாக உறுதி அளித்திருந்தார்.

அதன்படி, சுமார் 750 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டு நாட்டர்டாம் தேவாலயம் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாரிசின் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றான நாட்டர்டாம் தேவாலயம் 5 ஆண்டுக்குப் பிறகு பொதுமக்களின் வழிபாடுகளுக்காக நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.

இந்த தேவாலய திறப்பு விழாவில் அதிபர் இம்மானுவல் மேக்ரான், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஒரு சாத்தியமற்ற மறுசீரமைப்பை பிரான்ஸ் சாத்தியப்படுத்தி உள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து