முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஃபெஞ்சல் புயல் நிவாரணத்திற்கு ரூ.10 லட்சம் வி.சி.க. நிதியுதவி : திருமாவளவன் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2024      தமிழகம்
Thirumavalavan-1 2024-06-21

Source: provided

சென்னை : ஃபெஞ்சல் புயல் நிவாரணத்திற்கு 10 லட்சம் நிதியுதவி வி.சி.க. சார்பில்  வழங்கப்படும் என்று அக்கட்சியின்  தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 

இதே போல விழுப்புரம் மாவட்டத்திலும் வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதற்கிடையே தமிழகத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். 

தொடர்ந்து வெள்ள பாதிப்பு பணிகள் குறித்து ஆராய்வதற்காக மத்திய குழுவினர் தமிழகம் வந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இதனிடையே புயல் பாதித்த மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. 

இதுதவிர புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அரசின் சார்பில் ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் நிவாரணத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

அண்மையில் தமிழகத்தை தாக்கிய ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இப்பேரிடரிலிருந்து மக்களை மீட்கும் வகையில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் வி.சி.க. சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கென ரூ. பத்து லட்சம் வழங்கிட   உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

சட்டமன்ற உறுப்பினர்கள் தலா ஒரு மாத சம்பளத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா இரண்டு மாத சம்பளத்தையும் கொண்டு இந்நிதி முதலமைச்சரிடம் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து