முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 11-வது சுற்றில் குகேஷ் வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2024      விளையாட்டு
Gugesh-Neboniyaach

Source: provided

கோலாலம்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 11வது சுற்றில் தமிழக வீரர் டி. குகேஷ் வெற்றி பெற்றார். விறுவிறுப்பாக நடைபெற்ற 11-வது போட்டியில், குகேஷ் 6 புள்ளிகளும், லிரென் 5 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.

குகேஷ் 6 புள்ளிகள்...

நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் உடனான போட்டியில் வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கிய குகேஷ் 29வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், குகேஷ் 6 புள்ளிகளும் டிங் லிரென் 5 புள்ளிகளையும் பெற்றனர். சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில், 10வது சுற்று சமனில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று 11வது சுற்றுப் போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் குகேஷ் 6 புள்ளிகளும் லிரென் 5 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.

உலக சாம்பியனாக...

இதுவரை நடைபெற்றுள்ள 11 சுற்றுகளில் முதல் சுற்றில் டிங் லிரென் வென்ற நிலையில், 3வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். எஞ்சிய போட்டிகள் சமனில் முடிந்தன. 14 சுற்றுகள் கொண்ட உலக சாம்பியன்ஷிப் தொடரில், மீதமுள்ள 3 சுற்றுகள் சமனில் முடிந்தாலும் இந்திய வீரர் குகேஷ் உலக சாம்பியனாக வாய்ப்புள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து