முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு முன்பே நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது: டங்ஸ்டன் விவகாரத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 9 டிசம்பர் 2024      தமிழகம்
EPS 2024-12-09

Source: provided

சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டம் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதன்படி மாநில அரசுகளின் அனுமதியின்றி எந்த சுரங்க அனுமதியையும் வழங்கக்கூடாது என்றும், சுரங்கத்திற்கு தேர்வான பகுதி ஏற்கனவே பல்லுயிர் பெருக்கத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படுவதாக சட்டசபையில் தீர்மானத்தினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன் மொழிந்தார். சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான தனித் தீர்மானம் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அவர் கேட்ட கேள்விக்கு அவை முன்னவர் துரை முருகன் பதிலளித்து பேசினார். இதனால் சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது.

"மக்கள் போராட்டத்திற்கு பிறகு வேறு வழியின்றி பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். ஆரம்பக் காலத்திலேயே ஒப்பந்தபுள்ளி கோரும் போதே, இந்த விவரத்தை மத்திய அரசுக்கு தெரிவித்து இருந்தால், ஏலத்தை தடுத்து இருக்கலாம்" என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். இதையடுத்து நான் முதல்வராக இருக்கிற வரை நிச்சயமாக மத்திய அரசு இந்தத் திட்டத்தை கொண்டுவர முடியாது. கொண்டு வந்தாலும் தடுத்தே தீருவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

பின்னர் மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானம், பரபரப்பான விவாதங்களுக்குப் பிறகு அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் சட்டமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஒப்பந்தத்தை அறிவித்தது முதல் இறுதி செய்தவரை தமிழக அரசு அமைதி காத்தது. டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் முன்பே நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டது. கடித பரிமாற்றம் தொடர்பான விவரங்களை தமிழக அரசு இப்போதுதான் தெரிவிக்கிறது. தங்கள் தவறு தெரியவந்ததும் தமிழக அரசு பூசிமொழுகி, மறைக்கப் பார்க்கிறது. மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்திருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து