முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'முபாசா: தி லயன் கிங் படத்துக்கு குரல் கொடுத்த சிங்கம் புலி

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2024      சினிமா
The-Lion-King 2024-12-10

Source: provided

கடந்த 2019 இன் லைவ்-ஆக்ஷன் படமான 'தி லயன் கிங்' பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, பிரமிக்க வைக்கும் 'முஃபாசா: தி லயன் கிங்' திரைப்படம் இம்மாதம் 20, அன்று வெளியாகிறது. இதன் தமிழ் பதிப்பில் கதாபாத்திரங்களுக்கு பல முன்னணி நடிகர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

முபாசாவாக அர்ஜுன் தாஸ், டாக்காவாக அசோக் செல்வன், இளைய ரஃபிக்கின் குரலாக விடிவி கணேஷ் மற்றும் கிரோஸிற்கு நடிகர் நாசரும் குரல் கொடுத்துள்ளனர். இதில் முக்கிய கதாபாத்திரமான பும்பா மற்றும் டைமனுக்கு சிங்கம் புலி குரல் கொடுத்துள்ளனர்.

இந்த அனுபவம் குறித்து சிங்கம் புலி பகிர்ந்து கொண்டதாவது, "இந்தப் படத்தில் நான் இருப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இது முற்றிலும் தற்செயலானது. 2019 இல் எனக்கு முதலில் வாய்ப்பு கிடைத்த போது, நான் தயங்கினேன். ஆனால் என் குழந்தைகளின் உரையாடலைக் கேட்டவுடன் நான் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.

இதுபோன்ற வாய்ப்புகள் கிடைப்பது அரிதானவை என்றார்.  இப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் டிசம்பர் 20 அன்று இந்தியாவில் வெளியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து