முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் பிரபல பாடகர் வசித்து வந்த கட்டிடத்தில் திடீர் தீ விபத்து

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2024      இந்தியா
singer 2024-12-24

Source: provided

மும்பை: மும்பையில் பிரபல பாடகர் வசித்து வந்த கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பிரபல பாடகர் ஷான். இவர் மும்பையின் பந்த்ராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை அந்த கட்டிடத்தின் 7-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து, அங்கு சிக்கிக்கொண்டிருந்தவர்களை மீட்டனர். இதில் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை என தெரிகிறது.

இந்தசூழலில், பாதுகாப்பாக இருப்பதாக பாடகர் ஷான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'அன்பர்களே, எங்கள் கட்டிடத்தில் தீ பற்றிய செய்தி பரவி வருவதால், நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துக்கொள்கிறேன். தீ 7-வது மாடியில் ஏற்பட்டது. நாங்கள் அதற்கு மேலே வசிக்கிறோம்.  தீயணைப்பு துறை, மும்பை காவல்துறையின் விரைவான நடவடிக்கைக்கு ஒரு பெரிய நன்றி. நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து