முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை: சென்னையில் பாதுகாப்பு பணியில் 8,000 போலீசார்

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2024      தமிழகம்
Poleis 2023-09-29

Source: provided

சென்னை : இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணியில் 8,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (புதன்கிழமை) உலகம் முழுவதும் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வீடுகள், தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி சென்னையில் நேற்று இரவு முதல் இன்று வரை 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ் கொண்டாட சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 350 தேவாலயங்களில் சுழற்சி முறையில் போலீசார் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெரினா, சாந்தோம் பெசன்ட் நகர், உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்லும் மக்கள் கடலில் இறங்காதவாறு கண்காணிக்கப்பட உள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிசிடிவி கேமரா, டிரோன் மூலம் கண்காணிக்கபடுகிறது. சென்னையில் முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையிலும் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், பைக் ரேஸ், மது போதையில் வாகனங்கள் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து