முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி

புதன்கிழமை, 25 டிசம்பர் 2024      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, தூத்துக்குடி சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை, மேலக்கரந்தை கிராமம், பொன்வேல் பெட்ரோல்பங்க் எதிரில் நேற்று (25.12.2024) அதிகாலை திருப்பூரிலிருந்து திருச்செந்தூருக்கு தநா38 பிஎச். 5794 என்ற பதிவெண் கொண்ட கார் ஒன்றின் ஓட்டுநர் காரை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பின்புறத்திலிருந்து வந்த கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 5 நபர்களில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், அலங்கியம் கிராமத்தைச் சேர்ந்த திரு.விஜயகுமார் (வயது 38) த/பெ.பழனிச்சாமி, திரு.செல்வராஜ் (வயது 38) த/பெ.ஆறுமுகம் மற்றும் திரு.விக்னேஷ் (வயது 31) த/பெ.காளிமுத்து ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் ராஜ்குமார் (வயது 35) மற்றும் திரு.மகேஷ் குமார் (வயது 33) ஆகிய இருவருக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து