முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல்: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2025      இந்தியா
India 2023-09-17

Source: provided

புதுடெல்லி : ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தான் நடத்திய விமான தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தானின் குறிப்பிட்ட சில பகுதிகள் மீது கடந்த வாரம் பாகிஸ்தான் விமான தாக்குதல் நடத்தியது. பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தாக்குதல் தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் பதில் அளித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆப்கானிஸ்தான் குடிமக்கள் மீது வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானதை அறிந்தோம்.தாக்குதலில் பல விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகி உள்ளன. அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். உள்நாட்டு தோல்விகளுக்கு அண்டை நாடுகளை குற்றம் சாட்டுவது பாகிஸ்தானின் பழைய வழக்கம் என கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 16 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 16 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 18 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 18 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 16 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 16 hours ago
View all comments

வாசகர் கருத்து