முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் சொன்னதில் தான் உண்மை உள்ளது: பொள்ளாச்சி சம்பவம் குறித்து சபாநாயகர் அப்பாவு விளக்கம் : அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு

சனிக்கிழமை, 11 ஜனவரி 2025      தமிழகம்
CM-1 2023-11-18

Source: provided

சென்னை : பொள்ளாச்சி சம்பவத்தில் முதல்வர் சொன்னதில் தான் உண்மை உள்ளது என்று நேற்று சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக சட்டசபையில் நேற்று முன்தினம் நடந்த விவாதத்தின் போது ஆளும் கட்சியினரும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் காரசாரமாக வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒருவருக்கொருவர் சராமாரியாக விமர்சனம் செய்தனர்.

இந்த விவாதத்தில், “பொள்ளாச்சி சம்பவத்தில் புகார் கொடுத்தும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. 12 நாள்களுக்குப் பிறகுதான் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இடைப்பட்ட நாள்களில் என்ன நடந்தது? யாரைக் காப்பாற்றுவதற்காக அப்படிச் செய்தீர்கள்? ஆனால், அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் புகார் கொடுத்த உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “பொள்ளாச்சி சம்பவத்தில் முதல்வர் தவறான தகவல் தருகிறார். குற்றவாளிகள் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர்” எனக் கூறினார். அதை முதல்வர் மறுக்கவே இருவருக்கும் தொடர்ந்து இதுகுறித்து விவாதம் நடைபெற்றது.

இறுதியாக, பொள்ளாச்சி சம்பவத்தில்12 நாள்களுக்குப் பிறகே முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை பேரவைத் தலைவரிடம் சனிக்கிழமை சமர்ப்பிக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும், அப்படி ஆதாரத்தை அளித்துவிட்டால், அதற்கு உரிய தண்டனையை நீங்கள் ஏற்க வேண்டும். அப்படி, 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்திருந்தால், அதற்குரிய தண்டனையை நான் ஏற்கிறேன் என்றும் கூறியிருந்தார். இதனை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி ஏற்றுக் கொண்டார். பேரவைத் தலைவர் அப்பாவு இருவரும் சனிக்கிழமை (நேற்று) ஆதாரத்தை என்னிடம் தரலாம் என்றார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று காலை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியவுடன் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் 20 பேர் பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் ஆதாரங்களை வழங்கினர். அதேபோல, திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான ஆதாரங்களை வழங்கினார்.  

இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவு கூறுகையில், "பொள்ளாச்சி சம்பவத்தில் முதல்வர் மற்றும் அ.தி.மு.க. சார்பில் ஆவணங்கள் வழங்கப்பட்டன. பொள்ளாச்சி வழக்கில் தாமதமாக எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டது என முதல்வர் கூறியதே உண்மை. பாலியல் வன்கொடுமை நடந்து 12 நாட்களுக்கு பின்னரே எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இரண்டு தரப்பு ஆதாரங்களையும் நான் பார்த்துவிட்டேன், நான் கூறும் தீர்ப்பு தான் இறுதியான தீர்ப்பு. இருவரும் இதோடு முடித்துக் கொள்ளுங்கள் என கூறியதால் முடித்துக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார். சபாநாயகரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் முழக்கமிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து