முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் பெண்களுக்கான பாதுகாப்பில் முன்னிலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2025      தமிழகம்
CM 2024-12-16

Source: provided

சென்னை : இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும் முதல்வருமான முதல்வர் ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

தமிழ்நாட்டு மக்களின் அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழர்களின் இல்லத்திலும் உள்ளத்திலும் உண்மையான மகிழ்ச்சிப் பொங்கிட வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்களின் வாழ்விற்கு விடியல் தரும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது திராவிட மாடல் அரசு.  

ஆண்டுத் தொடக்கத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில், தமிழ்நாடு அரசின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையிலான உரையைக் காழ்ப்புணர்வுடன் ஆளுநர் படிக்காமலும், தமிழ்த்தாய் வாழ்த்தினை மதிக்காமலும் வெளியேறினாலும், பேரவைத் தலைவரால் படிக்கப்பட்ட அதன் தமிழாக்க உரை, இந்தியாவில் தமிழ்நாடு எந்தெந்த இலக்குகளில் முன்னேறிய மாநிலமாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகின்ற வகையிலே அமைந்திருந்தது.

தொழில் வளர்ச்சியில் கடந்த மூன்றாண்டுகளாக மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கண்டு, உலகளாவிய முதலீடுகளை ஈர்த்து, பரவலான அளவில் மாநிலமெங்கும் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு, லட்சக்கணக்கானோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை வழங்குகிற கட்டமைப்பைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 8 லட்சத்து 42 ஆயிரத்து 720 மனித உழைப்பு நாள்களுடன் 4 லட்சத்து 81 ஆயிரத்து 807 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய முதன்மை மாநிலமாக நம் தமிழ்நாடு திகழ்கிறது.

இந்தியாவில் உள்ள பெண் தொழிற் பணியாளர்களில் 40 விழுக்காட்டிற்கும் அதிகமான பெண்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள நகரங்களில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகமாக இருக்கிறது என்பதையும் அண்மையில் வெளியான ஆய்வறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்தியாவில் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரக்கூடிய முதல் 20 நகரங்களில் தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், வேலூர் ஆகிய 8 மாநகரங்கள் இடம்பிடித்திருக்கின்றன. பெண்களின் பாதுகாப்பையும் அவர்களின் சுதந்திரத்தையும் உறுதி செய்வதை உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட மாடல் அரசு முதன்மை இலக்காகக் கொண்டு செயல்படுவதன் விளைவாகவே இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பில் முன்னணியில் உள்ளது தமிழ்நாடு என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து