முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூக்கும் புன்னகையில் மனம் நிறைகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

புதன்கிழமை, 15 ஜனவரி 2025      தமிழகம்
CM-3-2025-01-15

சென்னை, முதல்வர் மு.க ஸ்டாலின் தனது வலைதள பதிவில், மாளவிகா ஐயர் என்பவரின் பதிவை பகிர்ந்து பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

சமூக சேவகர், மனித உரிமை போராளி, மாடல் என பன்முகத் திறமைகளை கொண்டவர் மாளவிகா ஐயர். இவர் சிறு வயதில், குண்டு வெடிப்பினால் பாதிக்கப்பட்டு இரண்டு கைகளையும் இழந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு மகளிர் தினத்தில், பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை ஒருநாள் நிர்வகிக்கும் பொறுப்பு 7 சாதனைப் பெண்களுக்கு வழங்கப்பட்டது. அதில் ஒரு சாதனைப் பெண் தான் இந்த டாக்டர் மாளவிகா ஐயர்.

இவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழக அரசின் விலையில்லா பொங்கல் சேலையில் விலை மதிப்பில்லாத புன்னகையுடன் உங்கள் மாளவிகா! பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் மனதில் மகிழ்ச்சியையும் உடலில் உற்சாகத்தையும் கொண்டு வரட்டும்" என பதிவிட்டு இருந்தார். இவரது பதிவை குறிப்பிட்டுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின், "பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசின் விலையில்லா பொங்கல் திட்டம் குறித்த நெகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக முதல்வர் மு.க ஸ்டாலின், மாளவிகா ஐயரின் பதிவை பகிர்ந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து