முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஞ்சி டிராபியில் ரிஷப் பந்த்

புதன்கிழமை, 15 ஜனவரி 2025      விளையாட்டு
Rishabh-Pant 2023-12-12

Source: provided

2024-25 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபியின் இரண்டாவது சுற்று  போட்டியில் டில்லி அணிக்காக இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் விளையாட விருக்கிறார். வருகிற 23ஆம் தேதி நடைபெறவுள்ள சௌராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் டில்லி அணிக்காக ரிஷப் பந்த் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டில்லி ரஞ்சி அணியில் இடம்பிடித்துள்ள நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாடுவாரா? என இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்று டில்லி கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. விராட் கோலி கடைசியாக 2012 ஆம் ஆண்டு ரஞ்சி டிராபியில் விளையாடியிருந்தார். ஆனால், ரிஷப் பந்த் விளையாடுவதை அவரே உறுதிபடுத்தியுள்ளார்.

கடந்த 2017-18 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபிக்கான தொடரின் இறுதிப்போட்டியில் விதர்பா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார் பந்த். டில்லி அணி தற்போது 14 புள்ளிகளுடன் குரூப்-டி பிரிவில் மூன்றாம் இடம்பிடித்துள்ளது. பந்தைத் தொடர்ந்து மற்ற இந்திய வீரர்கள் ஷுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் முறையே அவர்களின் அணியான பஞ்சாப் மற்றும் மும்பை அணியில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

____________________________________________________________________

ரஞ்சி டிராபி: தமிழக அணி அறிவிப்பு

2024-25 ஆம் ஆண்டு ரஞ்சி டிராபிக்கான தமிழக கிரிக்கெட் அணியில்   சாய் கிஷோர் கேப்டனாகவும், விக்கெட் கீப்பர் ஜெகதீசன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட தொடரில் விளையாடிய ஆல்ரவுண்டர் ஷாரூக் கான், வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இரட்டைசதம் விளாசிய நட்சத்திர வீரர் சாய் சுதர்சன் காயம் காரணமாக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதால் அவர் அணியில் இடம்பெறவில்லை. முந்தைய சுற்றுகளில் விளையாடி ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டி தொடரில் விளையாடவிருப்பதால், அணியில் இடம்பெறவில்லை.

தமிழ்நாடு அணி: ஆர்.சாய் கிஷோர் (கேப்டன்), என்.ஜெகதீசன் (துணை கேப்டன்), விஜய் சங்கர், பாபா இந்தர்ஜித், முகமது அலி, ஆண்ட்ரே சித்தார்த், பிரதோஷ் ரஞ்சன் பால், பூபதி வைஷ்ண குமார், அஜித் ராம், லக்‌ஷய் ஜெயின், லோகேஷ்வர், சந்தீப் வாரியர், திரிலோக் நாக், சித்தார்த், முகமது.

____________________________________________________________________

தொடரை கைப்பற்றியது ஆஸி. 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஆஷஸ் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.  முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து பந்துவீச்சில் தடுமாறியது. அந்த அணியில் முன்னணி வீராங்கனையான எல்லிஸ் பெர்ரி (60 ரன்கள்) தவிர மற்ற வீராங்கனைகள் யாரும் பெரிய அளவில் ரன் அடிக்கவில்லை. இதனால் 44.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆஸ்திரேலியா 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 4 விக்கெட்டுகளும், ஆலிஸ் கேப்ஸி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 48.1 ஓவர்கள் விளையாடிய இங்கிலாந்து 159 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆஸ்திரேலியா தரப்பில் அலனா கிங் 4 விக்கெட்டுகளும், கிம் கார்த் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து