முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோகித்-காம்பீர் மோதலா? - விளக்கமளித்த பி.சி.சி.ஐ.

புதன்கிழமை, 15 ஜனவரி 2025      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

புதுடெல்லி : காம்பீருடன் ரோகித் சர்மாவுக்கும், அகர்கருக்கும் இடையே எந்த பிளவும் இல்லை என விளக்கமளித்துள்ளது.

வெளியான தகவல்...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இழந்தது. இந்த தோல்வியை தொடர்ந்து பயிற்சியாளர் கவுதம் காம்பீர்-கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இடையேயும், காம்பீர்-தேர்வு குழு தலைவர் அகர்கர் இடையேயும் மோதல் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) நிராகரித்துள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ.யின் துணைத்தலைவர் ராஜீவ சுக்லா  கூறியதாவது:-

எந்த பிளவும் இல்லை...

காம்பீருடன் ரோகித் சர்மாவுக்கும், அகர்கருக்கும் இடையே எந்த பிளவும் இல்லை. இது தொடர்பாக வெளியான தகவல் தவறானது. பேட்டிங்கில் நல்ல நிலையில் இல்லாததை உணர்ந்ததால் ரோகித் சர்மா சிட்னி டெஸ்டில் இருந்து விலசினார். விளையாடும் போது நல்ல நிலையில் இருப்பதும், மோசமாக இருப்பதும் நடப்பதுதான். ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி வருகிற 18 அல்லது 19-ந்தேதி இறுதி செய்யப்படும். தேர்வு குழுவினரும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும் அணியை முடிவு செய்வார்கள். இவ்வாறு ராஜீவ்சுக்லா கூறியுள்ளார். 

துபாயில் இந்தியா... 

சாம்பியன்ஸ் டிராபி போட்டி பிப்ரவரி 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் நடக்கிறது. இந்தியா மோதும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் 8 நாடுகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் வீரர்களை அறிவித்து விட்டது. இந்தியா, பாகிஸ்தான் மட்டுமே இன்னும் வீரர்கள் பட்டியலை வெளியிடவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து