முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூனியர் மகளிர் டி-20 உலகக்கோப்பை: வெற்றியடன் போட்டியை தொடங்கிய இந்திய அணி

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2025      விளையாட்டு
India 2024-02-05

Source: provided

கோலாலம்பூர் : 2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசுடன் நேற்று மோதியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் நிக்கி பிரசாத் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

வெறும் 44 ரன்கள்....

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. வெறும் 13.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் 44 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் 2 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை தொட்டனர். அதிகபட்சமாக கெனிகா கசார் 15 ரன்கள் அடித்தார். சிறப்பாக பந்துவீசிய இந்தியா தரப்பில் பருனிகா சிசோடியா 3 விக்கெட்டுகளும், ஜோஷிதா மற்றும் ஆயுஷி சுக்லா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். வெஸ்ட் இண்டீசில் 3 வீராங்கனைகள் ரன் அவுட் ஆனது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

அபார வெற்றி....

இதனையடுத்து 45 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்தியா 4.2 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 47 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் சானிகா சால்கே 18 ரன், கமலினி 16 ரன் எடுத்தனர். இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 21ம் தேதி மலேசியாவை எதிர்கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து