எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : யு.ஜி.சி. புதிய விதிகளை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தனத்தீர்மானம் நிறைவேற்றியது போல டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி 9 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும்வகையில் யு.ஜி.சி. வெளியிட்ட புதிய விதிமுறைகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். யு.ஜி.சி. இந்த விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஜன. 9 அன்று சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், யு.ஜி.சி.யின் புதிய வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து நாட்டில் பாஜக அல்லாத ஆளும் மாநில முதல்வர்களுக்கும் இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- தமிழ்நாடு சட்டப்பேரவையில், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு சமீபத்தில் வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதைப் போன்று, டெல்லி, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகம், கேரளம், பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் தெலங்கானா மாநில சட்டமன்றங்களிலும் நிறைவேற்றிட வேண்டுமென்று கோரி அம்மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 9-1-2025 அன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென்றும், இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புகளில் கற்கை முறைகளுக்கான குறைந்தபட்ச வரைவு நெறிமுறைகள்-2024 மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியிட்ட வரைவு நெறிமுறைகள்-2025 ஆகிய இரண்டு வரைவு நெறிமுறைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மேற்படி தீர்மானம் போன்று தில்லி, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகம், கேரளம், பஞ்சாப், மேற்கு வங்காளம், தெலங்கானா சட்டப்பேரவைகளிலும் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்திட வேண்டும். பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுகளின் பங்கைக் கட்டுப்படுத்தும் வகையிலும், பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வுகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட நிர்வாக நடைமுறைகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் குறித்து மாநில முதலமைச்சர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த வரைவு நெறிமுறைகளை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி ஏற்கெனவே தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை குறிப்பிட்டுள்ள முதல்வர், அனைத்து மாநிலங்களும் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுப்பது அவசியம் என தான் உறுதியாக நம்புவதாகக் குறிப்பிட்டு, தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய இந்தத் தீர்மானத்தைப் போன்று தங்களது மாநில சட்டமன்றங்களிலும் இதுதொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டுமென்று மேற்குறிப்பிட்ட மாநில முதல்வர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மாநில அரசுகளின் உரிமைகளைத் தெளிவாக மீறும் செயல் என்றும், இது நமது பல்கலைக்கழகங்களின் சுயாட்சியில் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர், அதிகாரத்தை மையப்படுத்தி, நமது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் மத்திய அரசின் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்பது மிகவும் முக்கியம் என அம்மாநில முதல்வர்களை தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, தனது இந்தக் கோரிக்கையை மேற்குறிப்பிட்ட மாநில முதல்வர்களும் பரிசீலித்து, தங்களது மாநில சட்டமன்றங்களில் இதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-01-2025.
20 Jan 2025 -
இன்று முதல் 2 நாட்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவகங்கையில் கள ஆய்வு - அழகப்பா பல்கலை.யில் புதிய நூலகத்தை திறந்து வைக்கிறார் - மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நாளை வழங்குகிறார்
20 Jan 2025சென்னை : இன்று முதல் (21, 22-ம் தேதி) 2 நாட்கள் சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் அங்கு கள ஆய்வில் ஈடுபடிகிறார்.
-
மத கஜ ராஜா சக்சஸ் மீட்
20 Jan 202512 வருடங்களுக்கு முன் தயாரான ஒரு படம் சில காரணங்களால் வெளிவராமல் தடைபட்டு, இப்போது காலம் எவ்வளவோ மாறியிருக்கும் சூழலில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து
-
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஈரோடு கிழக்கில் 47 பேர் போட்டி : 8 சுயேட்சை வேட்பாளர்கள் வாபஸ்
20 Jan 2025ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க., நா.த.க. வேட்பாளர்கள் உள்ளிட்ட 47 பேர் போட்டியிடுகின்றனர்.
-
நேசிப்பாயா விமர்சனம்
20 Jan 2025நாயகன் ஆகாஷ் முரளி, நாயகி அதிதி ஷங்கரை கண்டதும் காதல் கொள்கிறார். அந்நாள் முதல் அவருக்கு காதல் தொல்லைக் கொடுத்து ஒரு வழியாக தனது காதல் வலையில் விழ வைக்கிறார்.
-
காதலிக்க நேரமில்லை விமர்சனம்
20 Jan 2025குழந்தை பிறப்பு வளர்ப்பில் விருப்பமில்லாத நாயகன் ஜெயம் ரவி, திருமணம் செய்துக்கொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
-
துணை வேந்தர்களை நியமிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் யு.ஜி.சி. வரைவு நெறிமுறைகளை உடனே திரும்பப்பெற வேண்டும் : மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
20 Jan 2025சென்னை : பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது, பட்டப்படிப்புகளில் கற்றல் முறைகள் தொடர்பாக யு.ஜி.சி.
-
அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்: இந்திய மாணவர் சுட்டுக்கொலை
20 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்தம் மாதம் திறப்பு
20 Jan 2025திருவனந்தபுரம் : பந்தள அரச குடும்பத்தினர் தரிசனத்திற்குப் பின் ஹரிவராசனம் பாடி சபரிமலை நடை நேற்று அடைக்கப்பட்டது.
-
இந்த வாரம் வெளியாகும் பாட்டல் ராதா
20 Jan 2025அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’.
-
விஷ்ணு மஞ்சு நடிக்கும் கண்ணப்பா
20 Jan 2025ஏ.வி.ஏ. எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர படம் கண்ணப்பா.
-
குடும்பஸ்தன் டிரைலர் வெளியீட்டு விழா
20 Jan 2025சினிமாக்காரன் எஸ்.
-
காதலனை கொலை செய்த வழக்கு: காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை : கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு
20 Jan 2025திருவனந்தபுரம் : நாட்டையே உலுக்கிய காதலனை விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள ஐகோர்ட் உத்தர
-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
20 Jan 2025சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
-
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் தொடர்பான வழக்கின் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் : தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
20 Jan 2025புதுடெல்லி : முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் வழக்கின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டாக வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட
-
அதிக மதிப்பெண் பெறும் வடமாநில குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வித்துறை நிதியுதவி
20 Jan 2025சென்னை : வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை ஊக்குவிக்குமாறும், அவ்வாறு சேர்ந்து கல்வி பயிலும் மாணவர்கள் அரசு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால் உ
-
டாஸ்மாக் மதுபான கடைகளில் மும்மொழி அறிவிப்பு பலகை..? - தமிழ்நாடு அரசு விளக்கம்
20 Jan 2025சென்னை : டாஸ்மாக்கில் மும்மொழியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
சமூக ஆர்வலர் கொலை: இ.பி.எஸ். கடும் கண்டனம்
20 Jan 2025சென்னை : கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது தி.மு.க.
-
திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு: 6.80 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
20 Jan 2025திருப்பதி : திருப்பதியில் கடந்த 10 நாட்களில் 6.80 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நா.த.க. வேட்பாளருக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு
20 Jan 2025ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நா.த.க.
-
டிரம்பை சந்தித்த முகேஷ், நீடா அம்பானி
20 Jan 2025வாஷிங்டன் : டொனால்ட் டிரம்பை முகேஷ் அம்பானி, நீடா அம்பானி ஆகியோர் சந்தித்து பேசினர்.
-
இரட்டை இலை வழக்கு: அப்பீல் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
20 Jan 2025புதுடெல்லி : இரட்டை இலை வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு : விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை
20 Jan 2025புதுடெல்லி : ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.
-
ரூ.60 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம் விலை..!
20 Jan 2025சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.59,600-க்கு விற்பனையானது.