முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசடி வழக்கில் வங்கதேச கிரிக்கெட் வீரருக்கு வாரண்ட்

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2025      விளையாட்டு
Jaill 20221 01 04

Source: provided

 டாக்கா : மோசடி வழக்கில், வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஷேக் ஹசீனாவின் அவமி லீக் கட்சியின் முன்னாள் எம்.பியுமான ஷகிப் அல் ஹசனை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

செக் மோசடி வழக்கு

கடந்த 2024 ஆம் ஆண்டு டிச.15 அன்று ஐ.ஐ.எப்.சி வங்கியின் சார்பாக ஷகிப் அல் ஹசன் உள்பட 4 பேரின் மீது ரூ.3 கோடி அளவிலான செக் மோசடியில் ஈடுபட்டதாக வங்கதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஷகிப் அல் ஹசனுக்கு சொந்தமான அல்-ஹசன் அக்ரோ பார்ம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் ஐஐஎப்சி வங்கியில் பலமுறை கடன் வாங்கப்பட்டதாகவும், அந்த கடனை திரும்ப செலுத்துவதற்காக அவர் வழங்கிய காசோலைகள் அனைத்தும் அவரது வங்கி கணக்கில் பணம் இல்லாததினால் செல்லுபடியாகவில்லை எனவும் கூறப்படுகிறது.

கைது வாரண்ட் 

இதனைத் தொடர்ந்து, ஷகிப் அல் ஹசன், அவரது நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தை சார்ந்த மேலும் 3 பேரின் மீதும் வங்கியின் சார்பில் டாக்கா நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை கடந்த டிச.18 அன்று விசாரித்த நீதிமன்றம் அவரை ஜன.19 அன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அவர் ஆஜராகாததினால் அவருக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

மகுறா தொகுதி எம்.பி. 

முன்னதாக, வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவமி லீக் கட்சியின் மகுறா தொகுதி எம்.பி. ஆன ஷகிப் அல் ஹசன், ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டப் போது நாடு  தப்பினார். ஏற்கனவே, அந்நாட்டில் ஏற்பட்ட மாணவர் புரட்சியின்போது அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி வங்கதேசத்திற்கு திரும்ப மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து