முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன் லீக் கால்பந்து: பார்சிலோனா த்ரில் வெற்றி

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      விளையாட்டு
Barcelona 2025-01-22

Source: provided

மூனிச் : சாம்பியன் லீக்கில் பார்சிலோனா அணி 5-4 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. 

த்ரில் வெற்றி...

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் யு.இ.எப்.ஏ. சாம்பியன் லீக்கின் அசத்தலான போட்டி நேற்று நடைபெற்றது. அதில் பார்சிலோனா அணியும் பெனிபிசியா அணியும் மோதின.  முதல் பாதி முடிவில் பார்சிலோனா 1-3 என பின் தங்கியிருந்தது. இரண்டாம் பாதியின் தொடக்கத்திலும் பார்சிலோனா அணி பிந்தங்கியே இருந்தது. ஒரு கட்டத்தில் 2-4 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா பின் தங்கியிருந்தது. பின்னர், மீண்டெழுந்த பார்சிலோனா கடைசியில் 5-4 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. இதில் லெவண்டாவ்ஸ்கி (13’,78’) இரண்டு கோல்களும் எரிக் கிராஸியே (86’) ஒரு கோலும் அடித்தார்கள். ரபினா (64’, 90+6’) இரண்டு கோல்கள் அடித்தார். 

சிறந்த போட்டி....

இறுதிக் கட்டத்தில் 96ஆவது நிமிஷத்தில் அவர் அடித்த அற்புதமான கோலினால் பார்சிலோனா வெற்றியுடன் முடித்தது. இந்த ஆண்டின் சிறந்த போட்டியாக இதுவே இருக்குமென கால்பந்து ரசிகர்களும் வர்ணனையாளர்களும் கூறுகிறார்கள். இந்தப் போட்டியில் 5 மஞ்சள் கார்டுகள், 1 ரெட் கார்டும் கொடுக்கப்பட்டன. பெனால்டி வாய்ப்புகள் தேவையில்லாமல் பார்சிலோனா அணிக்கு வழங்கப்பட்டதாக எதிரணி ரசிகர்கள் இந்தப் போட்டியை, “இந்தாண்டின் மிகச் சிறந்த திருட்டு” எனக் கூறி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து