முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிஜமான கிரிக்கெட்டை விளையாட தனக்கு விருப்பம்: டி.வில்லியர்ஸ்

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      விளையாட்டு
de-Villiers 2023 08 18

Source: provided

ஜோஹன்ஸ்பர்க் : ஐ.பி.எல் அல்லது எஸ்.ஏ. 20 விளையாட மாட்டேன். ஆனால், கேமிராக்களால் கவனம்பெறாத நிஜமான கிரிக்கெட் விளையாடுவேன் என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

ஓய்வு அறிவிப்பு... 

114 டெஸ்ட், 228 ஒருநாள், 78 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார் ஏபிடி வில்லியர்ஸ். 16 பந்துகளில் 50, 31 பந்துகளில் 100, 64 பந்துகளில் 150 ரன்கள் குவித்த சாதனைப் பட்டியலில் தன் பெயரை உயரத்தில் வைத்துள்ளார். கடந்த 2021 முதல் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்த ஏபிடி வில்லியர்ஸ் தனது யூடியூப்பில் கிரிக்கெட் குறித்து விடியோ வெளியிட்டு வருகிறார். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட ஓய்வை அறிவித்ததாகக் கூறியிருந்தார். அவருக்கு ஆப்ரஹாம், ஜான் என்ற 2 குழந்தைகள் இருக்கிறார்கள். 40 வயதாகும் ஏபிடி வில்லியர்ஸுக்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். 360 டிகிரியிலும் அடித்து விளையாடக்கூடிய மிகச் சிறந்த வீரர்.

விளையாடுவேன்...

யூடியூப் சேனல் நேர்காணல் ஒன்றில் ஏபிடி வில்லியர்ஸ் கூறியதாவது: ஒருநாள் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவேன். ஆனால், எங்கு என்பது தெரியாது. எனக்கு குழந்தைகள் எனக்கு அழுத்தம் தருகிறார்கள். அவர்களால் நான் வலைப்பயிற்சிக்கு செல்கிறேன். எனது பையன் எனக்கு பந்துவீசும் உபகரணத்தில் பந்துவீசுவான். ஐ.பி.எல் அல்லது எஸ்.ஏ. 20 விளையாட மாட்டேன். ஆனால், கேமிராக்களால் கவனம்பெறாத நிஜமான கிரிக்கெட் விளையாடுவேன். என்னுடைய ஈடுபாட்டான கிரிக்கெட்டை முடித்துவிட்டேன்.

ஜாலியாக இருக்க....

வலது கண் நன்றாக வேலை செய்கிறது. இடதுகண் தான் சிறதி மங்கலாக இருக்கிறது. நான் எனது குழந்தைகளுக்காக மீண்டும் விளையாட விருக்கிறேன். ஆர்.சி.பி. குறித்து பேசவில்லை. நான் மீண்டும் அந்த அழுத்தத்தை ஏற்க விரும்பவில்லை. நான் எங்கு சென்றாலும் எனக்கு ஜாலியாக இருக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து