முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொல்லியல் பெருமைவாய்ந்த பொருள்களை காண கீழடி இணையதளம் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2025      தமிழகம்
cm2 2025-01-23

Source: provided

சென்னை: கீழடியில் அகழாய்வு மூலம் தோண்டி கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பெருமைவாய்ந்த பொருள்களை இணையதளம் வாயிலாகக் காணும் வகையில் கீழடி இணையதளத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கீழடி அருங்காட்சியத் திரையரங்கில் திரையிடப்படும் ஆவணப்படம் மற்றும் காட்சிக் கூடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து வகையான தரவுகள் எனக் கீழடி அருங்காட்சியகம் குறித்தான விவரங்களயும் இந்த மெய்நிகர் சுற்றுலாவில் கண்டு மகிழலாம். சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் துறையினர் அகழாய்வுகளை மேற்கொண்டு, பல பெருமை வாய்ந்த் தொல்லியல் கட்டமைப்புகள் மற்றும் பொருள்களைக் கண்டறிந்துள்ளனர். இவற்றை மக்கள் இருக்கும் இடத்திலிருந்தே காணும் வகையில், கீழடி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் காண மெய்நிகர் சுற்றுலாவை உருவாக்கி கீழடி இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை மக்கள் பாரக்கும் வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கீழடி ஆவணப்படம் மற்றும் கீழடி அருங்காட்சியகம் குறித்தான அனைத்து விவரங்களையும், இங்குக் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பெருமைவாய்ந்த பொருள்களையும் இந்த இணையதளத்தில் கண்டு மகிழலாம். வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகம் என்ற அறிமுகத்துடன் இந்த இணையதளத்தை பார்வையிடலாம். இங்கு கீழடியின் செயலி, அது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகள், அகழாய்வுகள் பற்றிய தகவல்களை மக்கள் அறிந்துகொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து