முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேதாஜி கனவு கண்ட இந்தியாவை கட்டியெழுப்ப நாம் பாடுவோம் பிரதமர் நரேந்திரமோடி பதிவு

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2025      இந்தியா
Modi PM 2024-12-20

Source: provided

புதுடெல்லி: இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்  ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது. அவர் கனவு கண்ட இந்தியாவை கட்டியெழுப்ப நாம் பாடுபடுவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் .

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 128-வது பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஜனவரி 23-ம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2022-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடி நேதாஜி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,' பராக்கிரம தினமான இன்று (நேற்று), நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது. அவர் துணிச்சலையும் மன உறுதியையும் வெளிப்படுத்தினார். அவர் கனவு கண்ட இந்தியாவை கட்டியெழுப்ப நாம் பாடுபடும் போது அவரது தொலைநோக்குப் பார்வை நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது. என்று தெரிவித்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து