முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையா? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில்

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2025      உலகம்
Jaishaker 2024-12-03

Source: provided

வாஷிங்டன்: பாகிஸ்தானுடன் மீண்டும் வர்த்தகத்தை தொடங்குவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்கும் விழாவில், அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் பங்கேற்கச் சென்ற மத்திய அமைச்சர்  ஜெய்சங்கரிடம் வாஷிங்டனில் செய்தியாளர்களை  சந்தித்தார் அப்போது    அவரிடம் பாகிஸ்தானுடன் மீண்டும் வர்த்தகத்தை இந்தியா தொடங்குகிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பாகிஸ்தானுடன் மீண்டும் வர்த்தகத்தை தொடங்குவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என   தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, கடந்த ஆண்டுக்கு பிறகு, பாகிஸ்தானுடன் வர்த்தகம் குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. இந்தியா, பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை ஒருபோதும் நிறுத்தவில்லை, மேலும் இது தொடர்பான முடிவு 2019 இல் பாகிஸ்தான் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது.

ஆரம்பத்தில் இருந்தே, இந்தியா மிகவும் விருப்பமான நாடு என்ற அந்தஸ்தைப் பெற வேண்டும் என்பதே எங்கள் ஆர்வமாக இருந்தது. பாகிஸ்தானுக்கு நாங்கள் அந்த அந்தஸ்தை வழங்கி வந்தோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு அதே அந்தஸ்தை வழங்கவில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அதன் அரசியலமைப்பின் 370வது பிரிவை இந்தியா ரத்து செய்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இம்ரான் கான் தலைமையிலான அப்போதைய பாகிஸ்தான் அரசாங்கம், ஆகஸ்ட் 2019 இல் அனைத்து இருதரப்பு வர்த்தகத்தையும் நிறுத்தி வைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து