முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறுதியில் அரினா சபலென்கா

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2025      விளையாட்டு
23-Ram-58-1-

Source: provided

கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்) - ஸ்பெயினின் பாலா படோசா உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அரினா சபலென்கா 6-4, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 

கிளார்க்குக்கு சாதனையாளர் விருது 

உலகக் கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் 64ஆவது நபராக ஆஸி. வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாழ்நாள் சாதனையாளர் விருது குறித்து கிளார்க் பேசியதாவது:- நான் சிறுவயதில் இருந்து பார்த்து வியந்த முன்னோடிகள், ரோல் மாடல்கள், அற்புதமான வீரர்கள் வரிசையில் நானும் இந்த விருதுபெறுவது மிகவும் கௌரவமாகக் கருதுகிறேன். ஓய்வு நம்மை என்னவெல்லாமோ செய்ய வைக்கிறது. கிரிக்கெட்டை பார்ப்பது மட்டுமே இப்போது முடிகிறது. நமது சிறந்த கிரிக்கெட்டை விளையாடி மக்கள் நம்மைப் புகழ்ந்து பேசுவது எல்லாம் எனக்கு 6 வயதிலேயே தொடங்கியது. 34 வயதில் ஓய்வை அறிவித்தேன். கிரிக்கெட் என்னுடைய வாழ்வாக இருந்தது. அது இன்னமும் எனது வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கிறது.

கிரிக்கெட் என்பது பொதுவாக நமது வாழ்க்கை போலவே இருக்கிறது. களத்துக்குச் சென்று சதமடிப்பது பின்னர் பேட்டினை உயர்த்துவது, பின்னர்  பீல்டிங்கில் சென்று 2ஆவது பந்திலேயே கேட்ச்சினை தவறவிடுவது என வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறது என்றார். பந்து தலைக்கு பட்டு இறந்துபோன பிலிப்ஸ் ஹக் கிளார்க்கின் உற்ற நண்பர். அவரது இறப்புக்குப் பிறகு அடுத்த நாள் இந்தியாவுடன் நடந்த டெஸ்ட்டில் சதமடித்து “எனது சிறிய சகோதரர்க்கு சமர்ப்பணம்” எனக் கூறி கிரிக்கெட் ரசிகர்கள் ரசிகர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தார்.

தாய்லாந்து வீரருக்கு சிறை

தாய்லாந்தைச் சேர்ந்த சோம்லக் கம்சிங் (வயது 52) கடந்த 1996 ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்  பெதர்வெயிட் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றார். இதுவே அந்த நாட்டின் முதல் ஒலிம்பிக் தங்க பதக்கமாகும். அதன் பின்னர், அந்நாட்டின் ஒலிம்பிக் நாயகனாக கருதப்பட்ட அவர் மீது கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் கோன் கென் நகரத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக புகாரளிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. இந்த புகாரை சோம்லக் தொடர்ந்து மறுத்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று அந்த சிறுமியை அங்குள்ள மதுபான விடுதி ஒன்றில் சோம்லக் சந்தித்தாகவும், அவருடன் தான் மறுநாள் காலை 3 மணி வரை அந்த சிறுமி இருந்ததையும் காவல் துறையினர் உறுதி செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, கோன் கென் மாகாணத்தின் நீதிமன்றம் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சோம்லக் குற்றவாளியென அறிவித்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்துள்ளது. மேலும், 5,000 டாலர்கள் (ரூ.4,32,307) அளவிலான பணத்தை இழப்பீடாக வழங்கவும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, தாய்லாந்து நாட்டின் முதல் ஒலிம்பிக் தங்கபதக்க நாயகனான சோம்லக் 1994 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய போட்டிகளிலும் குத்துச் சண்டை பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் அரையிறுதி போட்டி ஒன்றில் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி  மேடிசன் கீஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) - அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 7-5, 1-6, 6(8)-7(10) என்ற செட் கணக்கில் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதனால் மேடிசன் கீஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் . நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் அரினா சபலென்கா - மேடிசன் கீஸ் ஆகியோர் மோதுகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 10 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 10 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 12 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 12 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 10 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 10 hours ago
View all comments

வாசகர் கருத்து