முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சியில் கட்டுமான பணியின் போது முருகன் கோவில் வளைவு சரிந்து விபத்து

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2025      தமிழகம்
Trichy-2024-02-06

திருச்சி, திருச்சியில் உள்ள முருகன் கோவிலில் ஆர்ச் கட்டும் பணியின் போது திடீரென சரிந்து விழுந்தது.

திருச்சி மாவட்டத்தின் பிரபலமான கோவிலாக விளங்குவது குமாரவயலூர் முருகன் கோவில். கடந்த சில தினமாக கும்பாபிஷேகத்திற்காக பணிகள் நடைபெற்று வந்தது. வருகிற 19 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடக்க இருந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருக்கோவில் முழுவதும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

கோவிலின் நுழைவு வாயிலில் 25 அடி உயரமும் 70 அடி அகலமும் கொண்ட ஆர்ச் வளைவை சிமெண்ட் மற்றும் கற்களால் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நேற்று மதியம் ஆர்ச் சரிந்து விழுந்தது. அங்கு பணியாற்றிய 5 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வருகிற 19ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க இருந்த நிலையில் இந்த நுழைவுவாயில் சரிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து