எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![BJP-Office](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2025/02/09/BJP-Office.jpg?itok=CYa4PHe_)
புதுடில்லி, டெல்லி சட்டப்பேரவை தோ்தலில் ஆட்சியமைக்கத் தகுதி பெற்றுள்ள பா.ஜ.க. 48 தொகுதிகளிலும், ஆட்சியைப் பறிகொடுத்த ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளிலும் வென்றுள்ளன. ஆம் ஆத்மியின் அமைப்பாளா் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, சத்யேந்தா் ஜெயின், செளரவ் பரத்வாஜ் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் பலரும் அதிா்ச்சித் தோல்வி அடைந்தனா்.
2020 தோ்தலில் எட்டு இடங்களில் மட்டுமே வென்ற பா.ஜ.க. , இம்முறை கூடுதலாக 40 இடங்களில் வென்றுள்ளது. 2015-இல் 67 இடங்களிலும் 2020-இல் 62 இடங்களிலும் பெரும்பான்மை பலத்துடன் வென்ற ஆம் ஆத்மி கட்சி, இம்முறை 22 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
முதல்வா் அதிஷி, அமைச்சா்கள் கோபால் ராய், இம்ரான் ஹுசேன், முகேஷ் குமாா் அலாவத் ஆகியோா் தங்களின் தொகுதிகளில் வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டனா்.
புது டில்லி: இங்கு முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜ.க. வேட்பாளா் பா்வேஷ் சாஹிப் சிங்கிடம் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றாா். இந்தத் தொகுதியில் கடந்த 2013 முதல் தொடா்ந்து ஷீலா தீட்சித்தை தோற்கடித்தவா் கெஜ்ரிவால். இம்முறை இங்கு களம் கண்ட ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித்தும் இங்கு பா.ஜ.க. விடம் தோல்வியைத் தழுவினாா்.
கால்காஜி: இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் ரமேஷ் பிதூரியை விட 3,521 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தக்க வைத்துக்கொண்டாா் முதல்வா் அதிஷி. இத்தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் அல்கா லாம்பா களம் கண்டாா். முந்தைய தோ்தலில் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளா் தரம்பீா் சிங்கை விட 11,393 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தாா் அதிஷி.
சுல்தான்பூா் மஜ்ரா: டில்லி அமைச்சா் முகேஷ் குமாா் அலாவத், 17,126 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டாா். அவருக்கு எதிராக பா.ஜ.க. சாா்பில் கரம் சிங் கா்மாவும், காங்கிரஸ் சாா்பில் ஜெய் கிஷணும் போட்டியிட்டனா். 2020 தோ்தலில் பா.ஜ.க. வின் ராம் சந்தா் செளரியாவை 48,052 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவா் முகேஷ் குமாா் அலாவத்.
பல்லிமாரன்: இத்தொகுதியில் டில்லி அமைச்சா் இம்ரான் ஹுசேன், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வின் கமல் பாக்ரியை விட 29,823 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். 2015, 2020 ஆண்டுகளில் நடந்த தோ்தலிலும் அவா் இதே தொகுதியில் வெற்றி பெற்றாா்.
கிரேட்டா் கைலாஷ்: டில்லி சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாத், பா.ஜ.க. வின் ஷிகா ராயிடம் 3,188 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றாா். இத்தொகுதியில் 2013, 2015, 2020 ஆகிய தோ்தல்களில் வென்றிருந்தாா் செளரவ் பரத்வாஜ்.
ஷகுா் பஸ்தி: முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சத்யேந்தா் ஜெயின், பா.ஜ.க. வின் கா்னைல் சிங்கிடம் 20,998 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். இவரும் 2013, 2015, 2020 தோ்தல்களில் இதே தொகுதியில் வெற்றி பெற்றவா்.
காரவால் நகா்: பா.ஜ.க. வின் கபில் மிஸ்ரா, ஆம் ஆத்மி வேட்பாளா் மனோஜ் தியாகியை 23,355 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா். 2015-இல் இதே தொகுதியில் ஆம் ஆத்மி சாா்பில் போட்டியிட்டு வென்ற கபில் மிஸ்ரா, சமீபத்திய சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக பா.ஜ.க. வில் சோ்ந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஹிணி: பா.ஜ.க. வின் விஜேந்தா் குப்தா இத்தொகுயில் 37,816 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வேட்பாளா் பா்தீப் மித்தலை வீழ்த்தி தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டாா். 2015, 2020 தோ்தல்களிலும் இத்தொகுதியில் விஜேந்தா் குப்தா வென்றிருந்தாா்.
பட்கா்கஞ்ச்: பா.ஜ.க. வேட்பாளா் ரவீந்தா் சிங் நேகி, ஆம் ஆதமி கட்சியில் புதிதாக சோ்ந்த அவத் ஓஜாவை 28,072 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா். இத்தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் களம் கண்ட அனில் செளத்ரி 16,549 வாக்குகளைப் பெற்றாா். 2013, 215, 2020 ஆகிய தோ்தல்களில் தொடா்ந்து வெற்றி பெற்ற முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா இம்முறை ஜங்புராவுக்கு சென்றதையடுத்து இங்கு போட்டியிடும் வாய்ப்பு புதியவரவான அவாத் ஓஜாவுக்கு கிடைத்தது.
ஜங்புரா: இத்தொகுதியில் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா பா.ஜ.க. வின் தா்வீந்தா் சிங் மாா்வாவிடம் 675 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினாா். 2013-ஆம் ஆண்டு முதல் இத்தொகுதியை ஆம் ஆத்மி கட்சி தக்க வைத்து வந்தது.
சாந்தினி செளக்: இங்கு ஆம் ஆத்மியின் புனா்தீப் சிங் சாஹ்னே 17,126 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளா் சதீஷ் ஜெயினை வீழ்த்தினாா். இங்கு 2013-இல் காங்கிரஸின் பா்லாத் சிங் சாஹ்னே வெற்றி பெற்றாா். 2015-இல் தற்போது காங்கிரஸில் உள்ள அல்கா லங்ம்பா ஆம் ஆத்மி சாா்பில் போட்டியிட்டு இங்கு வெற்றி பெற்றாா். 2020-இல் ஆம் ஆத்மியின் பா்லாத் சிங் சாஹ்னே இங்கு வெற்றி பெற்றாா்.
ஓக்லா: இத்தொகுதியின் எம்எல்ஏவான அமானத்துல்லா கான், பா.ஜ.க. வேட்பாளா் மனீஷ் செளத்ரியை விட 23,639 வாக்குகள் கூடுதலாகப் பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டாா். 2015 முதல் இத்தொகுதியை தொடா்ந்து இவா் தன்வசத்தில் வைத்துள்ளாா்.
பிஜ்வாசன்: முன்னாள் அமைச்சா் கைலாஷ் கெலோட் டில்லி தோ்தலுக்கு முன்பாக பா.ஜ.க. வில் சோ்ந்து இத்தொகுதியில் களம் கண்டு 11,276 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா். இங்கு காங்கிரஸின் தேவிந்தா் குமாா் செஹ்ராவத்தும் ஆம் ஆத்மியின் சுரேந்தா் பரத்வாஜும் களத்தில் இருந்தனா். பாத்லி: இங்கு பா.ஜ.க. வின் ஆஹிா் தீபக் செளத்ரி, டில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவை 15,163 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளாா். ஆம் ஆத்மியின் அஜேஷ் யாதவும் இங்கு களத்தில் இருந்தாா்.
கரோல் பாக்: ஆம் ஆத்மியின் விசேஷ் ரவி 2013 முதல் இங்கு சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளாா். இத்தோ்தலில் பா.ஜ.க. வின் தேசிய பொதுச்செயலரும் தலித் சமூகத் தலைவருமான துஷ்யந்த் கெளதமை 7,430 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளாா்.
பாபா்பூா்: டில்லி அமைச்சா் கோபால் ராய், பா.ஜ.க. வின் அனில் குமாா் வசிஷ்தை விட 18,994 வாக்குகள் கூடுதலாகப் பெற்று 2015, 2020 ஆண்டுகளைப் போலவே இத்தொகுதியைத் தக்க வைத்துள்ளாா். இவரை எதிா்த்து காங்கிரஸ் சாா்பில் முகம்மது இஷ்ரக் கான் களத்தில் இருந்தாா்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 1 week ago |
-
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
10 Feb 2025சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
10 Feb 2025சென்னை : தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏழை, எளிய மக்கள் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-02-2025
10 Feb 2025 -
வேறு ஒருவரை முதல்வராக நியமித்தது கெஜ்ரிவால் செய்த அரசியல் பிழை பிரசாந்த் கிஷோர் விமர்சனம்
10 Feb 2025புதுடெல்லி: தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் வேறு ஒருவரை முதல்வராக நியமித்தது கெஜ்ரிவால் செய்த மிகப்பெரிய அரசியல் பிழை என ஜன் சுராஜ் கட்சித்தலைவர் பிரசாந்த் கிஷோர் விமர
-
இந்த வாரம் வெளியாகும் ஒத்த ஓட்டு முத்தையா
10 Feb 2025கவுண்டமணி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஒத்த ஓட்டு முத்தையா படம் வரும் 14ம் தேதி காதலர் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
-
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் பங்கேற்க முடிவு
10 Feb 2025தாம்பரம்: ஆசிரியர் அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள போராட்டத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பாக நூறு சதவீதம் ஆசிரியர
-
ஹமாஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட அடையாளம் தெரியாமல் உருமாறி போன இஸ்ரேல் பிணைக்கைதிகள்
10 Feb 2025ஜெருசலேம்: ஹமாஸ் பிடியில் இருந்த இஸ்ரேல் பிணைக்கைதிகளை கண்டு உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
அமெரிக்காவில் இரும்பு - அலுமினியத்துக்கு 25 சதவீதம் இறக்குமதிக்கு வரி அதிபர் அறிவிப்பு
10 Feb 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் இரும்பு- அலுமினியத்துக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் அறிவித்துள்ளார்.
-
அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழா விவகாரம்: புறக்கணிக்கவில்லை; என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினேன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
10 Feb 2025ஈரோடு: அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழாவை புறக்கணிக்கிறேன் என்பதைக் காட்டிலும், என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறேன்” என்று கொள்ளலாம் என அ.தி.மு.க. முன்னாள்
-
‘ஏரோ இந்தியா’ இந்தியாவின் சக்தியை வெளிப்படுத்துகிறது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்
10 Feb 2025பெங்களூரு: ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி, பாதுகாப்பு கண்காட்சியான ‘ஏரோ இந்தியா’ -வை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள யெலஹங்கா வ
-
தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
10 Feb 2025புதுடெல்லி : தமிழ்நாடு கவர்னருக்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
சர்வதேச விருது வென்ற பேட் கேர்ள்
10 Feb 2025அறிமுக இயக்குநர் வர்ஷா பாரத் இயக்கத்தில் உருவாகியுள்ள Bad Girl திரைப்படம் ரோட்டர் டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, உயரிய விருதான NETPAC விருதை வென்றுள்ளது
-
தமிழ்நாடு கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
10 Feb 2025சென்னை : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கமலினிக்கு ஊக்கத்தொகையாக 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது பெற்றோரிடம் வழங்கினார்.
-
பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் நரேந்திரமோடி
10 Feb 2025புதுடெல்லி : பிரான்ஸ் நடைபெறும் ஏ.ஐ. உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டார்.
-
மதுரை, பாலதண்டாயுதபாணி கோவிலில் அர்ச்சகர்களின் தட்டில் விழும் காணிக்கை உண்டியலில் செலுத்தும் உத்தரவு வாபஸ்
10 Feb 2025மதுரை: அர்ச்சகரின் தட்டில் விழும் காணிக்கை உண்டியலில் செலுத்தும் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி
10 Feb 2025சென்னை: கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு எடப்பாடி பழனிசாமி படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
-
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு வரும் 19-ம் தேதி வரை காவல்
10 Feb 2025ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் மீனவர்களை வரும் 19-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
தண்டேல் விமர்சனம்
10 Feb 2025மீனவரான நாக சைதன்யா அடிக்கடி கடலுக்கு மீன் பிடிக்க செல்வதை நாயகி சாய் பல்லவி விரும்பவில்லை. அதனால், மீன் பிடிக்கும் தொழிலை விட்டு விடும்படி மன்றாடுகிறார்.
-
உ.பி., மகா கும்பமேளாவில் கடும் போக்குவரத்து நெரிசல்
10 Feb 2025பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
-
சென்னை தலைமைச்செயலகத்தில் மதி அனுபவ அங்காடி திறப்பு : துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
10 Feb 2025சென்னை : தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் மதி அனுபவ அங்காட
-
ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை
10 Feb 2025வேலூர்: ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிக்கு முதுகு தண்டுவடம் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
-
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஓட்டு சதவீதம் அதிகரிப்பு
10 Feb 2025புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கடந்த 2020 தேர்தலில் பெற்றதை விட 2 சதவிகிதம் அதிகம் பெற்றுள்ளது.
-
டெல்லியில் அ.தி.மு.க. புதிய அலுவலம் திறப்பு : இ.பி.எஸ். திறந்து வைத்தார்
10 Feb 2025சென்னை : டெல்லியில் அ.தி.மு.க. புதிய அலுவலகத்தை இ.பி.எஸ். திறந்து வைத்தார்.
-
உ.பி. மகா கும்பமேளாவில் ஜனாதிபதி புனித நீராடினார்
10 Feb 2025புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் ஜனாதிபதிதிரவுபதி முர்மு புனித நீராடினார்.
-
சந்தன கடத்தல் வீரப்பன் உறவினர் மரணம்: விசாரணைக்கு உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு
10 Feb 2025சென்னை: சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜுனனின் சந்தேக மரணம் குறித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை நடத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள